இந்நிலையில் மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரஜ்ஷாஹி மாவட்டத்திலுள்ள கிராம மொன்றை சேர்ந்த சுபியா பேகம் (40 வயது) என்ற மேற்படி பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்பாலான பாலியலில் ஏற்பட்ட குற்றச்சாட்டில் 40 பிரம்படிகள் வழங்க கிராம தலைவர்களும் மதத் தலைவர்களும் தீர்ப்பளித்திருந்தனர்.
மேற்படி தண்டனை வழங்கப்பட்டு ஒரு மாதம் கழித்து பிரம்படியால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக சுபியா பேகம் உயிரிழந்தார்.
பங்களாதேஷில் மேற்படி தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பிரம்படி தண்டனைக்கு ஆளாகி ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல் தடவையென கருதப்படுகிறது.
இந்நிலையில் சுபியா பேகத்தை பிரம்பால் அடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையுடன் தொடர்புடைய ஏனைய நால்வரைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
மேற்படி 40 கசையடித் தண்டனையானது 10 பிரம்புகளை ஒன்றாக கட்டி 4 தடவைகள் அடிப்பதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த சுபியா பேகம் ரஜ்ஷாஹியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவ ரது காயங்கள் பாரதூரமாக இருப்பதால் தலைநகர் டாக்காவிலுள்ள மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்கு செல்வதற்கு சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக