லதிஷா ஆன் லோஸன் (31 வயது) என்ற பெண்ணே கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது மகன் ஜெஸெய்ஹ் கிங்கை படுகொலை செய்து போர்வையில் சுற்றி மறைத்து வைத்திருந்துள்ளார்.
லதிஷா ஆன் லோஸனையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என அவர்களது குடும்ப உறுப்பினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார், “போர்ட் வேன்' எனும் இடத்தில் தேவாலயமொன்றால் வழங்கப்பட்ட வீட்டில் லதிஷா ஆன் லோஸனும் அவரது 10 வயது மகளும் வசிப்பதை கண்டறிந்தனர்.
இதன்போது அந்த வீட்டின் மூலையில் வைக்கப்பட்டிருந்த பையொன்றில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஜெஸெய்ஹ் கிங் என்ற மேற்படி பாலகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனது பிடிவாதம் மிக்க செயற்பாடுகளை கட்டுப்படுத்த வழி தெரியாமலேயே அச்சிறுவனை படுகொலை செய்ததாக லதிஷா தெரிவித்துள்ளார்.
லதிஷா தனது மகள் சகிதம் வந்து தனக்கு குடியிருப்பதற்கு இடம் எதுவுமில்லை என இரந்து கேட்டமையாலேயே அவருக்கு வீட்டு வசதிசெய்து கொடுத்ததாக ஒயக்ட்ஜ் தேவாலய மதகுரு எலிஷா ஹஸ் கூறினார்.
இந்நிலையில் மேற்படி வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது. லதிஷாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக