ஸ்டிக்கர் பொட்டு ஆடைகளுக்கு தகுந்தது போல் கலர் கலராகவும் பல வடிவங்களிலும் வருகிறது. வட்டமாக பொட்டு வந்தது போக இன்று பாம்பு, மனித உருவம், பூக்கள், பிறை, நிலா, கல் வைத்த பொட்டு என்று நிறையவிதங்களில் கிடைக்கிறது..பஷனுக்கு தகுந்த படி பலவிதங்களில் இன்று பொட்டும் கிடைக்கிறது.
அகலமான நெற்றியினைக் கொண்ட பெண்கள், பெரிய பொட்டினை வைத்தால் நெற்றியில் அளவு சிறிதாக தெரிந்து அழகாக இருக்கும்.
சிறிய நெற்றியினை கொண்டவர்கள் இரண்டு புருவங்களுக்கும் நடுவில் சின்ன பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.வட்டகம் உள்ளவர்கள் கொஞ்சம் பெரிய பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.
நவீன ஆடைகள் அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகு தான்.
கோயிலுக்கு, போகும் பொழுது சாந்து பொட்டு, குங்குமம், விபூதி, சந்தன பொட்டு என்று வைக்கலாம்.கல்யாண விஷேசங்களுக்கு போகும் பொழுது நல்ல கல் வைத்த பொட்டு வைக்கலாம். கல்யாண பெண் கல் பொட்டு வைத்தால் வீடியோவில் சரியாக தெரியாது.ஆகையால் சாதாரண ஸ்டிக்கர் பொட்டு வைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக