மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே மக்கள் பெறுமாறு இத் தொழில்நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி அல்லது ரேடியோ என்பர்.
இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொன்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
தொழில் நுட்பம்
ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களில், மிக உயரமான கோபுரங்களில் அமைந்துள்ள ட்ரான்ஸ்மிட்டர்கள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை பயனர்கள் தங்களிடம் உள்ள ரிசீவர் எனப்படும், வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். இந்த ரிசீவர் ரேடியோ அல்லது ட்ராசிஸ்டர் ரேடியோ என அழைக்கப்படுகின்றது.
ரிசீவர் இயங்கும் முறையானது, வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து லவுட் ஸ்பீக்க்ரில்(Loud Speaker) ஒலிக்கும் வகையில் ரேடியோக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காப்புரிமம் அல்லது தனியுரிமம் (patent) என்பது இதற்குமுன் பதிவாகாத, அறிவுக் கூர்மையால் இயற்றப்பட்ட, பயன்தரும் ஒரு புத்தம் புதுக்கருத்தைப் படைத்து, அதனைப் பதிவு செய்து, அதனைப் படைத்தவர் மட்டுமே அவர் விரும்புமாறு பயன்படுத்த, அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு நாடு தரும் உரிமை. இதனைப் படைப்பர் தனியுரிமம் என்றோ, படைப்பர் காப்புரிமம் என்றோ, இயற்றுநர் தனியுரிமம் என்றோ, இயற்றுநர் செய்யுரிமம் என்றோ புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் தம்முடைய புதிய கருத்தை பகிர்ந்து கொள்வதால், அதற்கு ஈடு செய்யுமாறு ஒரு நாடு அவருக்கு ஒரு கால இடைவெளிக்கு தனி உரிமம் வழங்குகின்றது. இந்த புதிய கருத்து, செய்முறையில் பயனுடையதாக இருத்தல் வேண்டும், இதற்கு முன் யாரும் செய்திராததாக இருக்க வேண்டும், துறையறிவால் ஒரு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர் எளிதாக அடையக்கூடிய புது மாற்றமாக, புதுமையாக இருக்கக் கூடாது. எனவே புதிய கருத்து என்பது திறமைமிக்க அரும் புத்தாக்கமாக இருத்தல் வேண்டும்.
இதனால் இவ்வகை புதுக் கருத்தை இயற்றுவோர்களை புத்தியற்றுநர் (புதுமை+இயற்றுநர்) என்பர். ஏற்கனவே உள்ளதை முதன்முறையாகக் கண்டுபிடித்தல் வேறு, முன்பு இல்லாததை அறிவால் தோற்றுவித்தல் (இயற்றுதல்) வேறு.
வரலாறு
கி.மு. 500 இல், சைபரிஸ் எனும் கிரேக்க நகரில் (இன்றைய தெற்கு இத்தாலி), ஆடம்பரமாக வாழ்வதற்கு யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் அவர்களை ஊக்குவிக்க, அவர்களின் கண்டுபிடிப்பிற்கு ஒரு வருடத்திற்க்கான காப்புரிமம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக