டிஸ்னா தரங்கினி என அழைக்கப்படும் தனது தாயார், தான் பிறந்து 6 - 9 மாதங்களுள் தன்னை கொழும்பில் உள்ள அமைப்பபொன்றிடம் வழங்கியதாகவும், அந்த அமைப்பிலிருந்து தன்னை பெல்ஜியம் நாட்டவர் தத்தெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
1987 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி பிறந்த ஷானிக்கா, தனது பிறப்பு சான்றிதழில் உள்ள தாயாரின் விபரத்தை கொண்டு தனது தாயாரை பற்றிய விபரங்களை பெற்று கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் பிறந்த போது தாயார் மிரிகான பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த விபரங்களின்படி அவரது தாயார் நவம்பர் 14 ஆம் திகதி 1968 ஆண்டு பதுளையில் பிறந்தவர் எனவும் தெரிவித்துள்ளார். ஷானிக்காவின் தாயாரை பற்றி விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக 0115300800 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக