மினஸ் ஜெரெயிஸ் மாநிலத்திலுள்ள இபதிங்கா எனும் இடத்தைச் சேர்ந்த மயா தாஸ் டொரெஸ் கொன்சிகாவோ என்ற மேற்படி பெண்மணி, சுகவீனற்ற நிலையில் கடந்த புதன்கிழமை மாலை பிராந்திய பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தினர். இந்நிலையில் நத்தார் தினத்துக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை மருத்துவர்களால் மேற்படி பெண்மணியின் மரணச் சான்றிதழ் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இறந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருநாட்களாக அஞ்சலி செலுத்துவதற்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை நத்தார் தினத்தன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் நல்லடக்கத்திற்காக பெண்மணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது உடலில் அசைவு ஏற்படுவதை அவதானித்து அதிர்ச்சியடைந்த மலர்ச்சாலை ஊழியர் ஒருவர், அது தொடர்பில் உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவசர மருத்துவசேவை பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சவப்பெட்டியில் வைத்தே அப்பெண்மணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளõர்.
இந்நிலையில் மேற்படி பெண்மணி உயிருடன் இருக்கையில் இறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து பிராந்திய பொது மருத்துவமனை மருத்துவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக