உடல் பருமனைக் குறைத்து கண் கவரும் தோற்றத்தில் வலம் வருவதற்கு ஆசைப்படும் பெண்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்டவராக நியூஜெர்ஸியைச் சேர்ந்த டொனா சிம்ஸன் என்ற பெண் விளங்குகிறார்.
5 அடி 2 அங்குல உயரம் 644 இறாத்தல் நிறையுடைய இவர், தனது நிறையை 1000 இறாத்தலாக அதிகரித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணாக இடம்பெறுவதை இலட்சியமாக கொண்டுள்ளார்.
அவர் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பருமனான தாயாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது. அச் சமயம் அவரது நிறை 532 இறாத்தலாகும்.
இரு பிள்ளைகளின் தாயான டொனா, நத்தார் தினத்தன்று உலகிலேயே மிகப் பெரிய நத்தார் விருந்துணவை இரு மணித்தியாலங்களில் உண்டு சாதனை படைத்துள்ளார்.
25 இறாத்தல் நிறையுடைய இரு வான் கோழிகள், 15 இறாத்தல் நிறையுடைய பாலும் முட்டையும் சேர்ந்த இரு தொகுதி உணவு, 10 இறாத்தல் உருளைக் கிழங்கு பொரியல், 5 இறாத்தல் மசித்த உருளைக்கிழங்கு, 5 இறாத்தல் கரட், 5 இறாத்தல் இனிப்பூட்டிய சோளம், 5 இறாத்தல் வெண்ணெய் சேர்க்கப்பட்ட கடலைப்பருப்பு, 5 இறாத்தல் பாண், 4 பைந்து பழப் பானம், 4 பைந்து மாமிச கலவை, 5 இறாத்தல் மூலிகை மாமிச கலவை, ஒரு தட்டு சலாது உணவு என்பவற்றை அவர் இதன்போது உண்டுள்ளார்.
மேற்படி உணவின் போஷணைப் பெறுமானம் 30,000 கலோரிகளாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக