வெலிங்டன் நகரில் வசிக்கும் பார்பரா வில்லியம்ஸ் (40 வயது) என்ற மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் பிரவேசித்த குறிப்பிட்ட நாய் அவரைக் கடித்துக் குதறியுள்ளது.
பார்பரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு அவர் உயிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நாய் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஆபத்து மிக்க நாயை பாதுகாப்பின்றி அலையவிட்ட குற்றச்சாட்டில் நாயின் உரிமையாளரான 34 வயது நபர் கைதுசெய்யப்பட் டுள்ளார். எனினும் அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பார்பரா வில்லியம்ஸ் தனது வயதான பெண் உறவினர் ஒருவருடனும் அப்பெண்ணின் மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோருடனும் குறிப்பிட்ட வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக