இந்த உள்ளாடைகளானது பல இழை அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றீடு செய்துகொள்ள முடியும். அத்துடன் உள்ளாடையின் இடுப்பு மற்றும் கால்களுக்கான பகுதிகளில் இலாஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளதால் வாயு வெளிச்செல்வது தடுக்கப்படும்.
இதனால் இவ்வுள்ளாடையை அணியும்போது உடலிலிருந்து அசுத்த வாயு வெளியேறினாலும் அது உள்ளாடைக்குள் தேங்குவதால் சூழலில் துர்நாற்றம் தவிர்க்கப்படும்.
இந்த உள்ளாடையைக் தயாரித்த 'அண்டர்டெக்' நிறுவனத்தின் தலைவர் பக் வெய்மர் இது குறித்து குறிப்பிடுகையில் இந்த ஆடையானது அசுத்தமான மனித வாயுவிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
'இது குறித்து பல நகைச்சுவைகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆடை ஒரு நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
எந்த வேளையிலும், குறிப்பாக படுக்கையில், சமூக நிகழ்வுகள், உத்தியோகபூர்வ கூட்டங்களில் பங்குபற்றும்போது அல்லது வாகனங்களில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யும்போது இதனை அணிந்துக்கொள்ள முடியும்' என அவர் கூறினார்.
இந்த ஆடைகளை சலவை இயந்திரத்திலும் சலவை செய்ய முடியும். அதிலுள்ள உள் இழைகள் பாவனையைப் பொறுத்து, பல மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை சுமார் 750 - 1000 ரூபாவாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக