வெளிநாடுகளுக்குச் சென்று சாட்சியங்களை திரட்டக் கூடிய சட்ட அந்தஸ்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்கள் நிறுவனங்களை நாட்டுக்கு வெளியே சென்று சந்திக்கக் கூடிய சாத்தியம் கிடையாது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 15ம் திகதி இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சாட்சியங்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு ஒன்றுக்கு சென்று சாட்சியங்களைத் திரட்டக் கூடிய சட்ட அங்கீகாரம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு கிடையாது என ஆணைக் குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், அதனை ஏற்று வெளிநாடு செல்வதற்காக சட்ட அங்கீகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணர்கள் குழுவினை இலங்கையில் சந்திக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 30ம் திகதி பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களிடம் சாட்சியம் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக