மத்தியதரைக்கடற் பிராந்திய நகரான கன்டியா நகரைச் சேர்ந்த மேற்படி பெண்ணின் கணவரின் கையடக்க தொலைபேசிக்கு, குறிப்பிட்ட பெண் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்கும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றும் எழுத்து வடிவு செய்தியொன்றும் சம்பவதினம் அனுப்பப்பட்டிருந்தன.
எழுத்து வடிவ செய்தியில் கடத்தப்பட்ட பெண்ணை விடுதலை செய்வதற்கு 20,000 கப்பப்பணத்தை வழங்க கோரப்பட்டிருந்ததுடன் பொலிஸாரிடம் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கணவரோ எச்சரிக்கையையும் மீறி பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் பொலிஸார், இருக்கும் இடத்தை வெளிப்படுத்தும் இலத்திரனியல் கருவியொன்றை கப்பப் பணம் வைக்கப் பட்டிருந்த பையில் பொருத்தி அதனை ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
இலத்திரனியல் கருவி அனுப்பிய சமிக்ஞைகளை பின்பற்றி கப்பப் பணம் எடுத்துச் செல்லப்பட்ட காரை பொலிஸார் பின் தொடர்ந்தனர்.
கன்டியா நகரிலுள்ள கடையொன்றுக்குள் பணப்பையுடன் மேற்படி பெண் நுழைய தயாரான வேளையில் கையுங்களவுமாக அவரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அதன் பிற்பாடே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அவரே என்பதை கண்டறிந்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போலியான கடத்தல் நாடகத்தை ஆடி அச்சுறுத்தியமை, பொலிஸாரின் நேரத்தை வீணடித்தமை, பண மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு 7 தடவைகள் தனது பிள்ளைகளை போலியாக கடத்தி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக