இதன்போது எடுக்கப்பட்ட மார்பக “எக்ஸ்ரே' படத்திலேயே இயேசுவின் உருவம் தென்படுவதாக கரென் சிக்லர் தெரிவித்தார்.
அவர் அண்மையில் மார்பக புற்றுநோய்க்கான அறுவைச்சி கிச்சைக்கு உட்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி அறுவைச் சிகிச்சைக்கு முன் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கரென் சிக்லர் கடைத் தெருவுக்கு சென்றுள்ளார்.
தான் அறுவைச் சிகிச்சைக்கு பின் இறந்து விடலாம் என்ற வேதனையுடன் அவர் கடையொன்றை அண்மித்த போது முன் பின் அறிகமற்ற ஒருவர் அவரை அணுகி, “நீ குணமடைவாய் என இயேசு கிறிஸ்து கூறினார்'' என தெரிவித்து விட்டு அகன்றார்.
மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்படும் வரை அதை அறிமுகமற்ற ஒருவன் எதேச்சையான கூற்று என்றே கருதியதாக கரென் சிக்லர் கூறினார். தன்னுள் குடிகொண்டுள்ள இயேசு கிறிஸ்து, தனது புற்றுநோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக