வெள்ளி, 31 டிசம்பர், 2010

எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!

20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந் நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற் கான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக் களும் மேற்கொள்ளப்படவில்லை.

தென்னாபிரிக்காவே உலகிலேயே அதிகளவில் எச்.ஐ.வி. நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன.

எ#ட்ஸ் கொடுமையின் புதிய முன் னரங்க நிலையமாக ஆசியா விளங்கு கிறது என்ற ஐ.நாவின் அறிவிப்பும் உலகில் எய்ட்ஸினால் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக எமது அயலகமான இந்தியா (தமிழகத் தில் 1.6 லட்சம் எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்) இருக் கிறது என்ற உண்மையும் இலங்கையர் களாகிய நாம் வெறுமனே செ#தியாக நோக்கிவிட்டு அலட்சியம் செய்யக் கூடியவையல்ல என்பதை உணர்ந்து கொள்ளத் தவறக்கூடாது. எய்ட்ஸ் பர வும் பேராபத்தில் இருந்து தப்பிப்பிழைத் ததாக இன்று உலகில் எந்தவொரு நாடுமேயில்லை.

பல மில்லியன் உயிர்களை காவு கொண்டுள்ள இக்கொடிய நோயைப் பற்றிய முழு விவரங்களை நாம் ஒவ் வொருவரும் அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு முழு மையாக அறிந்து கொண்டு விழிப்பு ணர்வுடன் இருந்தால் மட்டுமே எய்ட்ஸ் அரக்கனை வெல்ல முடியும். இதுவரை அது இரண்டரைக் கோடிக் கும் அதிகமானவர்களைப் பலியெடுத்து விட்டது. எய்ட்ஸின் தொற்றுக்கு இலக் கான 4 கோடிக்கும் அதிகமானவர்கள் இன்று உலகில் இருக்கிறார்கள். தினமும் புதிதாக உலகில் 6 ஆயிரம் பேரை எய்ட்ஸ் தொற்றிக்கொண்டு வருகிறது.

இலங்கையில் முதல் எய்ட்ஸ் நோயாளி 1986 இல் பதிவானார். அவர் ஒரு வெளி நாட்டவர் ஆவார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் 1987இல் இனங்காணப்பட்டார். நோய் இனங்காணப்பட்ட ஆரம்பகாலத்தில் எச்.ஐ.வி. தொற்றுடையோராக இனங் காணப்பட்ட பெரும்பாலானோர் வெளி நாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்த வராவர். எனினும் தற்போதைய எச்.ஐ.வி தொற்றுடையோருள் பெரும்பாலானோர் இலங்கையிலேயே தொற்றுக்கு ஆளா னோராவர். தொற்றுகை அடைந்துள்ள வர்கள் குருதிச் சோதனை மூலம் உறு திப்படுத்தப்பட்டோர் நாட்டின் சகல பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளனர்.

இலங்கை நிலவரம்

எச்.ஐ.வி         :     1285

எய்ட்ஸ்         :     332

எய்ட்ஸ் மரணங்கள்     :     216

எச்.ஐ.வி தொற்றுடைய

சிறுவர்கள்         :     31

யாழ். நிலவரம்

1) யாழில் இனங்காணப்பட்ட முதல் நோயாளி : 1993ஆம் ஆண்டு

2) மொத்த நோயாளிகளின் எண் ணிக்கை 42

3) மொத்த இறப்புக்கள் 23

4)  ஆண் : பெண் 3:1  (ஆ30 : பெ12)

தொற்றடைந்தோராக இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளோருக்கு எச்.ஐ. வி தொற்று ஏற்பட்டுள்ள விதம்:

* தாயிடமிருந்து குழந்தைக்கு.

* இரத்தம் (குருதி) பாய்ச்சல் மூலம்.

* ஒத்தபாலார், இருபாலர்

பாலுறவுகள்.

* ஆண், பெண் பாலுறவுகள்.
எய்ட்ஸை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குகின்றது. நிர்ப்பீடனத் தொகுதியில் உள்ள ரீஹெல்பர் கலங்களையே (T-Helper cell) இது முக்கியமாகத் தாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எச்.ஐ.வி. வைரஸ் தொற்றியிருக்கும் கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரஸ்கள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளி யின் நிர்ப் பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

பல மில்லியன் உயிர்களை  காவு கொண்டுள்ள  இக்கொடிய நோயைப் பற்றிய  முழு விவரங்களை நாம்  ஒவ்வொருவரும் அறிந்திருக்க  வேண்டியது காலத்தின்  தேவையாகும். அவ்வாறு  முழுமையாக அறிந்து  கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே எய்ட்ஸ்  அரக்கனை வெல்ல முடியும்.

ஒருவர் எச்.ஐ.வியுடன் பல ஆண்டு காலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகி றார். ஓர் ஆண்டுக்குள்  ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற முறையில் உடலுற வில் ஈடுபடும் போது நோய்த் தொற் றுள்ள ஒருவரிடமிருந்து நோய் இல்லாத ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் நோய் களே பாலியல் தொற்று நோய்கள் எனப் படுகின்றன(Sexually Taransmitted diseases) அதாவது பாலியல் உறவினால் தொற்றக்கூடிய நோய்கள் பாலியல் தொற்று நோய்கள் எனப்படுகின்றன.

இந்த நோய்கள் பாலியல் தொடர் புக்கு அப்பால் வேறு முறைகள் மூலமும் தொற்றிக் கொள்ளலாம்.

பாலியல் தொற்று நோய்கள் கடத்தப்படக்கூடிய முறைகள்

* தொற்று அடைந்த ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உறவில் ஈடுபடுதல்

* தொற்று அடைந்த ஒருவரின் குருதியை பாய்ச்சும் போது

* தொற்றுள்ள ஒருவருக்கு பயன் படுத்திய ஊசியை கிருமியழிக்காது மற்றவர்கள் பாவித்தல்

* பச்சை குத்துதல்

* அக்குபங்க்ச்சர் முறையில் ஊசியை கிருமியழிக்காது பயன்படுத்துதல்

* தாய்ப்பாலின் ஊடாக

* கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் மூலமாக.

ஆபத்தை கொண்டுள்ளோர் யார்?

எந்த ஒருவரும் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாக இடமுண்டு. இனம், மதம், செல்வநிலை, சமூக அந்தஸ்து போன்ற எதுவும் இதற்கு விதிவிலக்கானதல்ல. ஆள்களின் ஆரோக்கிய நிலையும் கூட தொற்றில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. எந்த ஒருவரதும் பாலியல் நடத்தையே எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தும் பிர தான காரணியாகக் கொள்ளப்படுகிறது.

1) வர்த்தக ரீதியில் பாலியல் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும்

2) ஒன்றுக்கு மேற்பட்டோருடன் பாலி யல் தொடர்புகளை வைத்திருப்போர்.

3) தன்னின உடலுறவில் ஈடுபடுவோர்.

4) பாலுறுப்புக்களில் புண்கள், தழும் புகள், காயங்கள் உடையோர்.

5) பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் ஏனைய நோ#களுக்கு ஆளாகியுள்ளோர்.

மேலும் நாளத்தினூடாகப் பகிர்ந்து பரிமாறியவாறு போதைப் பொருள்களை ஏற்றிக் கொள்வோருக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படத்தக்க சந்தர்ப்பம் பெருமளவுக்குக் காணப்படுகின்றது.

எச்.ஐ.வி தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களில் ஈடு படுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், விளை யாடுதல், புகையிரதம் மற்றும் பஸ் வண்டி களில் பயணம் செய்தல், வியர்வை, கண்ணீர், சிறுநீர் மற்றும் முத்தமிடல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத் திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ, நீச்சல் குளம் மற்றும் இருமல், தும்மல், கொசுக்கடி மூலமாகவோ பரவாது. இருப்பினும் பொது இடங்களில் சவரம் செய்து கொள்ளும் ஆண்கள் பொதுக் கத்திகளைப் பயன்படுத்தாமல் புதிய சவர அலகுகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியிலே  எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்க வர்களாக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச். ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வு டன் செயற்பட வேண்டும் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெவ் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.


எய்ட்ஸ் அறிகுறிகள்


எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறி கள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது ஃப்ளு ”ரமாக (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது. இந்தத் தீவிர எச். ஐ.வி பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக் குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம், வயிற்றுப் போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து) போன்ற்றினைத் தோன்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட எச்.ஐ.வீ தொற்றிய ஒரு சில நாள்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்ப நிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங்காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் எச்.ஐ.வி தொற்றைக் கண்டு பிடிப்பது கடினமாகும்.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித் துணிக்கை அனைத்தும் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கும்போதுதான் எச்.ஐ.வியின் வேகம் சற்றுக் குறைகிறது. எச்.ஐ.வி தொற்றிக் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு எச்.ஐ.வீ தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. எச்.ஐ.வி தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

எச்.ஐ.வி குருதிப் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியோர் யார்

* தமது பாலியல் நடத்தைகள் தொடர் பாகச் சந்தேகம் எவருக்கேனும் ஏற்பட் டால்.

* ஒருவருக்கு  எச்.ஐ.வி  தொற்று ஏறபட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப் படுவதாக இருந்தால்.

தொழில் வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கரு தப்படும் பட்சத்தில்.

* பாச்”வதற்காகப் பயன்படுத்தப் படும் குருதி மாதிரி ஒவ்வொன்றிலும்   எச்.ஐ.வீ தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல்.

ஆகிய சந்தர்ப்பங்களில் குருதிச் சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும்.

குருதிச் சோதனையைச் செய்து கொள்ளக் கூடிய இடம் எது?

* பாலியல் தொடர்புகள் மூலம் கடத் தப்படும் நோ#கள் தொடர்பாகக் கிளி னிக்குகளில் (பிணியாய் நிலையங் களில்)

* பொது வைத்தியசாலையிலும் ஆய்வு கூடங்களிலும்.

இரத்த வங்கியில் (பாய்ச்சலுக்காகப் பெறப்படும் குருதி மாதிரிகள் யாவும் சோதிக்கப்படும்)

சிகிச்சை முறை

எச்.ஐ.வி.  தொற்றைப் பூரணமாகக் குணமாக்கத்தக்க எந்த மருந்தும் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் தொற்றடைந்தோரை ஆரோக் கியமாக வைத்திருக்கத்தக்க மருந்து வகை தற்போது பயன்பாட்டில் உள் ளன. இவை ரெட்ரோ வைர”க் கொல்லி மருந்துகள் எனப் படுகின்றன.

எய்ட்ஸ் நோய் தொற்றுதலுடன் உயிர் வாழ வழமையாக எதிர்வு கூறப்படும் காலத்தை விட எய்ட்ஸ் நோயை உண் டாக்கும் எச்.ஐ.வி வைரஸ்க்கு எதிராக வழங்கப்படும் சிகிச்சைகளைப் பெறுவோர் சராசரியாக 13 ஆண்டுகள் அதிக காலம் வாழ முடிகின்றமை ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி. எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க தற்போது இருக்கும் ஏ.பி.சி. திட்டம் மிக வும் பிரபலமான ஒன்று. அதாவது, ஏநீ –   திருமணத்திற்கு முன் பாலுறவைத் தவிர்த்தல் பிநீ– திருமணற்குப் பின் உண்மையாயிருத்தல் சிநீ –  இரண்டும் முடியாத பட்சத்தில் ஆணுறை அணிதல். இவை பார்ப்பதற்கு மிகவும் எளி தாகவும், பயனுள்ளவையாகவும் தோன்றினாலும் நடைமுறையில் பல சிக்கல்களையும் தத்துவ தர்க்கங்களையுமே இது கொண்டுவர வல்லது. இது ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும் ஆரம்பகட்ட முயற் சியாக இது உதவுகிறதே தவிரே இதுவே முடிவான தீர்வு அல்ல.

எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!

எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொதுவாக வேண்டப் படாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இது தவறு. ஒரு எய்ட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என் கூறமுடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும் கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங் களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எய்ட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளைகளையும், சலுகைகளை யும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

வைத்திய கலாநிதி கு.கணேசலிங்கம்

பாலியல் தெற்று நோய்கள் கிளினிக், போதனா வைத்தியசாலை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல