"யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும்.
ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செய்யும் பட லம் தொடங்கி விட்டது. மக்களின் முகங் களில் அச்ச உணர்வுகள் ஊறிப்போய் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற பயப் பீதியுடன் உறைந்துள்ளனர்.
கொள்ளையடிப்பு என்ற போர்வை யில் உன்னதமான உயிர்களைப் பறித் துக் கொண்டிருக்கிறார்கள் முகமூடி அணிந்த சிலர். சங்கானையில் அண்மை யில் அந்தணர்களைக் குறிவைத்து கொள்ளையர்கள் மேற்கொண்ட கொடூர மூர்க்கத்தனமான சூட்டுச் சம்பவத்தில் பிரதம குருக்கள் ஒருவரின் உயிர் பறி போனது. அத்தோடு நின்றுவிடாது. அப் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கி முனையில் பல வீடுகளில் கொள்ளை யிடப்பட்டுள்ளது.
அளவெட்டிப்பகுதியில் உள்ள வீட் டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கு நின்ற காவல் நாயினைச் சுட்டுக் கொன்று அங்கிருந்தவர்களை அச்சத்துக் குள் ஆழ்த்திவிட்டு பெருமளவான நகை களைச் சூறையாடிச்சென்றுள்ளனர்.
இது இவ்வாறிருக்கையில் உரும்பிரா யில் மூன்று கோயிலடிப்பகுதியில் நேற்றுமுன்தினமிரவு 10.30 மணியள வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா. சிவலிங்கம் அவரது வீட் டில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சூட்டுச்சம்பவம் கொலையா? கொள்ளையா? என்பதை ஆராயும் பொருட்டு சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றோம்.
இங்கு நடந்தவற்றை அலசி விசாரித் தோம். அப்போது கிடைத்த தகவல்கள்.
"மரணமான பிரதிக் கல்விப் பணிப் பாளரின் மனைவி ஓர் ஆசிரியை, இவ ருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இவ ரது தாயார் பாரிசவாத நோயினால் பாதிக் கப்பட்டுள்ளார்.
அவரது தாயாரின் வீடு இவரது வீட்டுக்கருகில் சுமார் 200 மீற்றர்தூரத் தில் தான் அமைந்துள்ளது. சம்பவதினம் இரவு மனைவியும் இரண்டு ஆண்மகன் மாரும் அந்த தான் வீட்டில் தங்கியிருந் தனர்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் தனது 13 வயதுடைய மகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.
தகப்பனும் மகளும் தமது வழமை யான பணிகளை நிறைவு செய்துவிட்டு நித்திரைக்குச் செல்லமுற்பட்டபோது,"முகமூடி எதுவும் அணியாது கையில் துப்பாக்கியுடன் வீட்டு விறாந்தையில் ஒருவன் நிற்கிறான். இதைக் கண்டு அச் சமடைந்த மகள் தகப்பனின் கழுத்தி னைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் என் கின்றனர் உறவினர்கள்.
"சத்தம் போடக்கூடாது உன்ர காதி லிருக்கும் தோட்டைக் கழற்றித் தா.." என்று அந்த ஆயுததாரி அதட்டுகின் றான். பிள்ளை தோட்டைக் கழற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆயுததாரி தகப் பனின் நெஞ்சில் படபடவென துப்பாக் கியால் சுடுகின்றான்.
அவள் திகைத்துப் போய் மௌனித் துப் போகிறாள்...
ஆயுததாரி வீட்டின் கதவினைத் திறந்து கழற்றிக் கொடுத்த தோட்டினை யும் பெற்றுக்கொண்டு தன்பாட்டில் செல்கிறான்.
அதிர்ச்சியில் அடிபட்டுப் பீதியில் உறைந்திருந்த அந்தச் சிறுமி தந்தை குற்றுயிராய்க் கிடக்கும் அவலக் காட்சி யைக் கண்டு அலறுகிறாள்.
அப்போதுதான் அவரது மனைவியும் இரண்டு மகன்மாரும் அயலில் உள்ள வர்களும் அங்கு ஓடிப் போகிறார்கள்.
உடனடியாகக் கோப்பாய்ப் பொலி ஸாருக்குத் தகவல் கொடுத்தார்கள். அங்கு இரவு 11 மணிக்கு விரைந்த பொலிஸார் சுடுபட்டுக் கிடந்த பிரதிக் கல்விப் பணிப்பாளரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
அவரைக் கொண்டு செல்லும் போதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப் படுகின்றது.
குறித்த ஆயுததாரி வீட்டுக்குள் எவ் வாறு சென்றான்? புதிர் விடுபட வில்லை. கதவு உடைக்கப்பட வில்லை. யன்னல்களும் அவ்வாறு தான். கூரைப் பகுதியால் சென்றதற்கான சான்றுகளை யும் காணமுடியவில்லை.
அப்படியிருக்கையில் உள்ளே எப் படிச் சென்றிருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது. தன்னந் தனியாக முக மூடியில்லாமல் ஆயுதத்துடன் என்ன துணிவோடு அங்கு சென்றுள்ளான்.
வீட்டில் ஏராளமான பெறுமதி மிக்க பொருள்கள் உள்ளதாகவும் அவை எதுவு கொள்ளையிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆக ஒரு சோடித் தோட்டுக்காகவா அங்கு சென்றான்? அல்லது அவரைக் கொலை செய்யத் தான் போனானோ என்ற பலத்த சந்தேகங் கள் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந் ததுள்ளன.
அங்கு வந்து வெறியாட்டம் நடத்திய ஆயுததாரி எவ்வாறு திரும்பிச் சென்றுள் ளான் என்பது மர்மமாகவே உள்ளது. ஏனென்றால் அப்பகுதியில் வாகன இரைச்சல் எதுவும் கேட்கவில்லை என் றும் அப்பகுதியில் உள்ள அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், வீட்டின் வளாகத்தில் சிகரட் பிடித்ததற்கான பெட்டியொன்று உள்ள தாக இறந்தவரின் மகன் சொன்னார்.
மரணமான பிரதிக் கல்விப் பணிப்பா ளர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் னர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள் ளார் என்றும் அவர் எந்தவிதமான பிரச்சி னைகளுக்கும் செல்லாதவர். தான் உண்டு தன்பாடுண்டு என்ற மென்மை யான சுபாவம் நிறைந்தவர் என்றும் வலி காம் வலயத்தில் கடமைபுரியும் இவரது சக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அங்கு நடந்த சம்பவங்களையும், பிற காரணிகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது அங்கு நடந்தது கொள்ளையல்ல கொலை என்பதை ஓரளவு ஊகிக்க முடி கின்றது.
கொள்ளையடிப்பு என்ற போர்வை யில் தோரணையில் மீண்டும் படு கொலைகள் யாழில் நடக்கப் போகின் றனவா? என்ற அச்சம் எல்லோரு டைய மனங்களிலும் ஆழப் பதியத் தொடங் கியுள்ளது.
எல்லாவற்றையும் இழந்து என்ன செய் வது, ஏது செய்வது என்ற நிலை தடு மாறி நிற்கும் குடாநாட்டு மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழல் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத் துள்ளது என்று எல்லோரும் மனதைத் தேற்றிக் கொண்டிருக்கும் போது மீண் டும் துப்பாக்கி முனைகள் தமிழ் மக் களை நோக்கி நீள்வதைக் கண்டு அவர் கள் அச்சம், பீதியால் உறைந்து போய் உள்ளார்கள்.
ஆயுதம் கொண்டு நடமாடும் சூழ் நிலையை உருவாக்கும்போது அது இன் னும் கொலைகள் நடக்க ஏதுவாக அமை யப் பெறும்.
ஆகையால் இத்தகைய வேண்டத் தகாத சம்பவங்கள் மேன்மேலும் நடக்க விடாமல் உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். "ஏனெனில் எல் லாப் பொறுப்பும் அவர்களுக்கே".
உதயன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக