ஜுராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். 2006-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் 34 நாட்கள் யுத்தம் நடந்தது. இந்த யுத்தம் காரணமாக 1300 பேர் பலியானார்கள். இந்த யுத்தத்தின் போது ஸ்பீல் பர்க் இஸ்ரேல் நாட்டுக்கு ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
இதனால் கோபம் கொண்ட அரபு லீக் அமைப்பை சேர்ந்த 14 மத்திய கிழக்கு நாடுகள் ஸ்டீவன் ஸ்பீல் பர்க் இயக்கும் படங்களை திரையிடுவதில்லை என்று தடை விதித்து உள்ளன. 2007-ம் ஆண்டு அரபு லீக் நாடுகள் கூட்டத்தில் அவரது பெயரை கறுப்பு பட்டியலில் வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக