2004ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஒத்துழைப்புடன் தாம் இந்தியாவிற்கு தப்பிச் சென்று அடைக்கலம் கோரியதாக பிளெக் வெளியிட்டுள்ள கருத்து உண்மைக்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மறைந்திருந்து தமது உறுப்பினர்களுக்கு கருணா கட்டளைகளை பிறப்பித்ததாக பிளெக் தெரிவித்துள்ளார். அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தரவுகளில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, கருணா படுகொலை செய்ததாக ரொபர்ட் பிளெக் தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டில் மற்றுமொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜையும் கருணாவின் சகாக்கள் படுகொலை செய்ததாக ரொபார்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவப் புலானய்வுப் பிரிவினருடன் கருணா நெருங்கிச் செயற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும், பிரதி அமைச்சர் கருணா மீதும் அமெரிக்கா அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அரசாங்கத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கருணா தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் மற்றும் இராணுவத் தரப்பினர் மீது அமெரிக்கா கடுமையான குற்றச் சாட்டுக்களை சுமத்தி வரும் அதேவேளை, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா முக்கிய ஆதரவினை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க இராணுவ புலனாய்வுத் தகவல்கள் மிகவும் உருதுணையாக அமைந்ததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக