இது குறித்து கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார். இதனால் தமக்குறிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தனது கவனத்துக்கு வந்துள்ளதாக கூறிய வவூனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இது தொடர்பாக விசாரிக்க சில அதிகாரிகளை முகாம்களுக்கு அனுப்பியதாகவும், கடத்தல் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உரிய இடத்துடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியா முகாம்களில் தற்போது 17,000 ஆயிரம் பேர் இருப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் இவர்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக