கனடா ரொரன்ரோவில் வசிக்கும், சுகிர்தன் ஸ்ரீஸ்கந்தராசா, பரணீதரன் சடாச்சரம் மற்றும் தயாபரன் தனநாயகம் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் தன்னியக்க பணப்பரிவர்த்தனை இயந்திரம் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடன் அட்டைத் தகவல்களைத் கொள்ளையிடும் கருவியைப் இவர்கள் பொருத்தியுள்ளனர்.
அதன்பின் அவர்கள் வான் ஒன்றில் இருந்தவாறு கடன் அட்டைத் தகவல்களை கொள்ளையிட்டுக் கொண்டிருந்த போது பொலிஸாரிடம் வசமாகப் பிடிபட்டுள்ளனர். பொலிஸார் அவர்களைக் கைது செய்து சோதனையிட்ட போது கடனட்டைகளின் தகவல்களைக் கொள்ளையிட பயன்பட்டுத்திய கமெரா ஒன்றையும், கடனட்டை உராய்வு இயந்திரம் ஒன்றையிம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக