உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த இவரை நேற்று மாலை வான் ஒன்றில் சென்ற ஆயததாரிகள் சுட்டுக் கொன்றபின் தப்பிச் சென்றதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு சென்றவர்கள்; கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு சென்ற தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் தமக்குத் தேவையானவர்களை சுட்டுக் கொல்லும் புதிய பாணியிலான நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் கொள்ளை முயற்சியின் ஒன்றின் போது சுடப்பட்டதும் ஆலைய குருக்கள் மரணமானதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக