நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிலோன் என்ற பெயரைத் தாங்கிய சகல அரச நிறுவனங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிலோன் மின்சாரசபை என்ற பெயரை ஸ்ரீலங்கா மின்சாரசபை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாதாலீ சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதன்படி, சிலோன் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வரும் சகல அரச நிறுவனங்களிலும் பெயர் மாறம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மீன் பிடிக் கூட்டுத்தாபனம், மிச்சாரசபை ஆகிவற்றின் பெயர்களுக்கு முன்னால் சிலோன் என்ற பதம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக