அவர் மனைவி பர்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நோய் காரணமாக அவர் தன் காலை உடைத்துக்கொண்டார். அவர் உயிர் வாழவே விரும்பவில்லை. 83 வயதான அவர் தன் மனைவியுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பே அமைதியாகவும் சந்தோஷமாகவும் சாகவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அவர் மனைவி சன் யுவான் பிங் வாழ விரும்பாததால் அவரை கருணைக்கொலை செய்வது என்று தீர்மானித்தார்.
இந்த கொலை திட்டத்தை அவர் கடந்த 6-ந்தேதியே தன் இணையதளத்தில் பதிவு செய்தார். அதன் பிறகு அவர் தன் மனைவியின் தலையில் ஸ்க்ரூ டிரைவரை வைத்து அடித்தார். இதில் அவர் மரணம் அடைந்தார்.
அதன்பிறகு அவர் போலீசுக்கு போன் செய்து தான் கொலை செய்த விவரத்தை தெரிவித்து விட்டு அவர்கள் வருவதற்காக வீட்டில் காத்திருந்தார். போலீசார் வந்ததும் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக