மேலும், இவ்வாறான நடவடிக்கைக்கு துணைபோகும் தமிழ் அரசியல்வாதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது போன்ற செயற்பாடுகளால் தமிழ் மாணவர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய நிகழ்வுகளில் பிரதமர் உரையாற்றும் போது இனங்களுக்கிடையே ஐக்கியத்தை பற்றி உரையாற்றினார். இவ்வாறு ஐக்கியத்தை பற்றி உரையாற்றுபவர்களுக்கு ஏன் தமிழில் தேசிய கீதத்தை கேட்கமுடியாது எனவும் இனங்களுக்கிடையேயான புரிதல் இவ்வாற செயற்பாடுகளின் மூலம் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது போன்ற விடயங்களுக்கு துணைபோவது, தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளதாகவும், இலங்கை அரசு அரசியல் சாசனத்திற்கு முரணாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்ததுடன் ஊடக அமைச்சர் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என அறிவித்தது பொய்யாகி போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக