தேசிய பாதுகாப்பு தினத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் -
தேசிய கீதத்தினை தமிழிலா, சிங்களத்திலா, ஹிந்தியிலா அல்லது ஒப்பாரியாக பாடுவதா என்ற கேள்வி தான் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முயலக்கூடாது.
தமது உறவுகளை எண்ணி தமிழ் மக்கள் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களை நிம்மதியாக அழுவதற்கு வாய்பளித்து கவலை தீர இடமளிக்க வேண்டும். அவ்வாறு கவலை தீர்ந்த பின் இவ்வாறான களியாட்டங்களை முன்னெடுக்கலாம்.
அரசு இவ்வாறன கொண்டாட்டங்களை தங்களது பக்கத்தில் நடத்தட்டும். தமிழர் பகுதிகளில் கொண்டாடி தமிழர்களின் நொந்த நெஞ்சிலே உதிரம் வடிக்க வைக்க வேண்டாம். அதுதான் அவர்களது பொறுப்பு. என்னை பொறுத்தவரையில் நேற்று நடந்தது களியாட்ட நிகழ்வே என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக