சில பெண்கள் ‘வாடகை குழந்தை’ மூலமும் பிச்சை எடுத்து பணம் குவித்தனர். பிச்சைக்காரர்களை பிடிக்கும் அதிரடி நடவடிக்கை கடந்த 2005ம் ஆண்டு அக் டோபர் 1ம் தேதி துவங்கியது. சிக்கிய பிச் சைகாரர்களை, ஆதரவற்றோர்களை தங்க வைக்க, கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் தங்கும் விடுதி துவக்கப்பட்டது.
விடுதியில் மெத்தை, கட்டில், மின் விசிறி, கழிவறை, குளியலறை வசதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பிச்சைகாரர்கள் 11 பேர் விடுதியில் தங்கினர். 4 நாளில், அத்தனை பேரும் தப்பினர். ஓடிய பிச்சைகாரர்களை, விரட்டி பிடித்து டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக, பிச்சைகாரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிச்சை எடுத்த 317 பேரும், கடந்த ஜனவரி 11ம் தேதி 46 பேரும், கடந்த செப்டம்பர் 6ம் தேதி 141 பேரும் சிக்கினர். குளிக்க வைத்து, முடி திருத்தி, சேவிங் செய்து புதிய துணி கொடுத்த னர். கையேந்த கூடாது, உழைத்து வாழ சொல்லி ‘பேச்சு வார்த்தை’ நடத்தினர். ஆனால் அது எடுபடவில்லை.
தெரு, தெருவாக கடுமையாக உழைக்கும் மக்களை காட்டி வியர்வை துளியின் பெருமையை விளக்கினர். தள்ளாத வயதில் மூட்டை சுமக்கும் முதியவர்களை காட்டினர். உழைக்காமல் வாழும் கேவலத்தை புரிய வைத்தனர். ‘இப்படியும் ஒரு பொழப்பா’ என காலம் கடந்த பின்னர் சிலர் திருந்தினர். இனி எப்படி வாழ்வது என யோசித்தனர். இனி கையேந்த மாட்டோம், உழைப்புக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீர் மல்க கேட்டனர்.
அப்படி, திருந்தி உழைத்தவர்கள், 504 பேரில் வெறும் 19 பேர் மட்டுமே. இதில் 6 பேர் பெண்கள். அனைவரும் 50 வயது கடந்தவர்கள். பிச்சை தான் வாழ்க்கை என அடம் பிடித்த 485 பேர் சொந்த ஊருக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர். கை நீட்டி பிச்சை எடுத்தால் சிறை என எச்சரிக்கப்பட்டதால், ‘பட்டியலிடப்பட்ட’ பிச்சைகாரர்கள் கோவை யை காலி செய்தனர். முன்னாள் பிச்சைகாரர்கள், இப்போது காய்கறி, பூ வியாபாரம், வாட்ச்மேன், மளிகை கடை வியாபாரம் என அசத்துகிறார்கள்.
விடுதியில் தங்கியுள்ள கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த சண்முகையா (76) என்பவர் வீணாக கிடக்கும் பேப் பரை ‘கவராக’ தயாரிக்கிறார். இதில் தினமும் 100 ரூபாய் கூலி கிடைக்கிறது. இவர் கூட்டுறவு சொசைட்டியில் அலுவலராக பணியாற்றியவர். மனைவி இறந்து போக, மகள் மன நிலை பாதித்து விட, ஆதரவின்றி அடைக்கலமானவர். சரளமாக ஆங்கிலம் பேச தெரிந்த இவர், ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டியாகவும் அசத்துகிறார்.
3 காப்பகம் திறப்பு: மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ நகரில் இன்னும் 400க்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். சிலர் பச்சிளம் குழந்தையை தின வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கிறார்கள்.
சமீபத்தில் 7 பேர் கைக்குழந்தையுடன் சிக்கினர். கவுன்சிலிங் கொடுத்தாலும் சொகுசு வாழ் வில், அதிகமாக சம்பாதித்து பழகியவர்கள் உழைக்க மறுக்கிறார்கள். உழைக்காதவர்களை வெளியேற்றுவதில் 70 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 30க்கும் மேற்பட்ட பகுதியில் 750 பேர் ரோட்டில் தங்கி கிடைத்த கூலி வேலை செய்வதாக ஆய்வு செய்து கண்டறிந்தோம். சிலர் ரோட்டோரம் உழைத்து வாழ்கிறார்கள். இவர்கள் வெயில் மழை யில்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக் காக பூசாரிபாளையம், செல்வபுரம், சொக்கம்புதூரில் வரும் 31ம்தேதி மூன்று காப்பகம் அமைக்கப்படும். இங்கே இலவசமாக தங்கலாம். ஆனால், கட்டாயம் உழைத்து தான் வாழவேண்டும். 3 நேரம், தலா 10 ரூபாய் செலவில் உணவு தரப்படும். ரோட்டில், தெருவில், பஸ் ஸ்டாண்டில் இனி யாரும் தங்க முடியாது, தங்க கூடாது. நகரில் மனநிலை பாதித்த 23 பேருக்கு தனி சிகிச்சை வசதியுடன், விடுதியில் தங்க வைத்திருக்கிறோம், ’’ என்றனர்.
இனி கையேந்த முடியாது....
காய்கறி விற்கும் தூத்துக்குடியை சேர்ந்த மாரியம்மாள் (72) கூறுகையில், மூன்று குழந்தைகளை நன்றாக வளர்த்து விட்டேன். தொழில் செய்து நன் றாக வாழ்ந்தும், என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். பஸ் ஏறி கோவை வந்தேன். பல இடங்களில் சுற்றி கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்தேன். மாநகராட்சியினர் என்னை தங்கும் விடுதியில் சேர்த்தார்கள்.
வயதானவர்கள் பலர் கூலி வேலை செய்வதை பார்த்தேன். 60 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இனி யாரிடமும் கையேந்த கூடாது என முடிவுக்கு வந்தேன். கூலி வேலைக்கு சென்றேன். இப்போது மாநகராட்சி மார்க்கெட்டில் இருந்து கூடையில் காய்கறி வாங்கி கொண்டு வீதி, வீதியாக விற்கிறேன். 50 ரூபாய், 100 ரூபாய் லாபம் கிடைக்கும். என்னை தேடி யாரும் வரவில்லை, நானும் என் சொந்தங்களை தேடி செல்லவில்லை. சாகும் வரை இங்கே இப்படியே வாழ முடிவு செய்து விட்டேன்.
Dinakaran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக