சீனாவில் பொழுதுபோக்கிற்காக நண்பர்களை தூண்டி 40க்கும் மேற்பட்ட கார்கள் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். சீனாவில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் டாய் குயில்வென். சிசுவான் மாகாணத்தை சேர்ந்தவர். இவர் பொழுதுபோக்கிற்காக கார் திருட்டில் ஈடுபட்டார். இவர் திட்டப்படி, நண்பர்கள் 4 பேர் கார்களை திருடி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட கார்களை இவர்கள் திருடியுள்ளனர்.
இவரது தற்போதைய நண்பர் ஜியாவோ கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை திருடி வந்தார். இந்நிலையில், டாய் மற்றும் இவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பொழுபோக்கிற்காக கார்களை திருடியது பின்னர் அதுவே டாய் குயில்வெனுக்கு பழக்கமாகிவிட்டது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக