கோள வடிவில் அமைந்த இக்கலத்தில் ஐந்து அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது சந்திரனின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (escape velocity) தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3 இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி (comet) போலத் தோற்றமளித்தது. மிகவும் பிரகாசமான இவ்வாயுக்கலவை இந்து சமுத்திரத்திற்கு மேலாகத் தெரிந்தது. லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4 இல் எட்டியது.
1833: பாக்லாந்தில் மீண்டும் பிரித்தானிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1942: ஜப்பானிய படைகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றின.
1955: பனாமா ஜனாதிபதி ஜோஸ் அன்டானியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959: சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது.
1971: ஸ்கொட்லாந்தில் இரு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் 66 ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக