மெடம் ஜீனா என அறியப்பட்ட, ரோஸ்மேரி பெலிசியா பெரேரா எனும் இப்பெண் கைது செய்யப்படுவதிலிருந்து நீண்டகாலமாக தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கொள்ளுப்பிட்டியிலுள்ள விபசார விடுதியொன்றில் ஊழல் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி ஜனக டி சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்றினால் நடத்தப்பட்ட முற்றுகையின்போது இப்பெண் கைது செய்யப்பட்டார்.
அவருடன் பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்ட இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
பெலிசியா மீது மனிதக்கடத்தல் மற்றும் விபசார விடுதி நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன. இக்குற்றச்செயலுக்கு உதவியதாக ஏனைய பெண்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, உஸ்பெகிஸ்தான் பெண்கள் இருவரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர விடுதலை செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக