150 ஆணடுகளுக்கு அன்டூ திஸ்லாஸ்ட்’ என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இது பொருளாதாரம் குறித்த சிந்தனையை திருப்பிப் போட்டது. இந்த புத்தகம் நம் தேசத் தந்தை காந்தி உள்ளிட்ட பலரை பெரிதும் பாதித்தது.
மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்த போது ஒரு நாள் பயணத்தில் இந்த புத்தகத்தை முதன்முதலாக வாசித்தார். அரசியல் பொருளாதாரம் குறித்த இதை ஜான் ரஸ்கின் என்பவர் கடந்த 1904 ஆம் ஆண்டு எழுதினார்.
இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் எழுதியிருப்பதாவது:-
அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமாம் இருந்தது. ஜொஹன்னஸ்பர்கில் இருந்து டர்பனுக்கு செல்ல 24 மணி நேரம் ஆனது. டர்பனில் மாலை நேரம் வந்து இறங்கினேன்.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள குறிக்கோளின்படி எனது வாழ்க்கையை மாற்றியமைக்க தீர்மானித்தேன். இது எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று எழுதியுள்ளார்.
‘அன்டூ திஸ் லாஸட்’ புத்தகம் எழுதுகையில் ரஸ்கின் நடுத்தர வயது எழுத்தாளர் இதற்கு முன் அவர் ‘தி செவன் லாம்ப்ஸ் ஆப் ஆர்க்கிடெக்சர்’ ‘தி ஸ்டோன்ஸ் ஆப் வெனிஸ்’ ஆகிய 2 பிரபலமான நூல்களை எழுதியிருந்தார். முதலாளித்துவம் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட இது கடந்த 1860ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இது முதலில் கார்ன்ஹில் பத்திரிகையில் ஒரு தொடராக 4 பகுதிகளாக வந்தது. பின்னர் 18 மாதங்கள் கழித்து ஒரே புத்தகமாக்கப்பட்டது.
இதில் பிரபல பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித் டேவிட் ரிகார்டோ மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோரின் கொள்ளைகள் நிராகரிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘அன்டூ திஸ் லாஸ்ட்’ என்னும் பெயர் புனித மேத்யூவின் போதனைகள் அத்தியாயம் 20ல் இருந்து எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக