பிரித்தானியாவில் தடய அறிவியல் துறையில் படித்து வரும் மாணவி சாரா, கடந்த டிசம்பர் மாதத்தில் ஒருநாள் கல்லூரி உணவு விடுதியில் சாப்பிடச் சென்றார். சாப்பிட்டுவிடடு, பணம் கொடுத்து சில்லறை வாங்கினார். அதில் 50 பென்ஸ் நாயம் ஒன்று மிகவும் பளபளப்பாகவும், புதிதாகவும் இருந்தது.
அதை எதேச்சையாக உற்றுப் பார்த்த சாராவுக்கு ஆச்சரியம் 2010ம்ஆண்டில் வெளியிடப்பட்ட இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த அந்த நாணயத்தில் 2011ம் ஆண்டு அச்சாகியிருந்தது. இதுகுறித்த உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சாரா கூறுகையில்:-
ஏதேச்சையாக அந்த நாணயத்தைப் பார்த்த போதுதான் அரசு நாணயசாலையில் செய்துள்ள மிகப்பெரிய தவறு என் கண்களில் தட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தவறை கண்டுபிடித்த சாராவுக்கு பரிசு வழங்க வேண்டும் என்றும் அவரது கல்லூரி படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாணயவியல் அறிஞர் ராப் டேவிஸ் கூறுகையில்:-
அரசு வெளியிட்டுள்ள நாணயத்தில் எதிர்பாராமல் நடந்துள்ள தவறு கவனிக்கப்படக் கூடியது. இதைக் கண்டுபிடித்த கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட் அச்சகத்தில் செய்தித் தொடர்பாளர் நிக்ஸ்கார்ஜிஸ் கூறுகையில்:-
இது எதர்பாராமல் நடந்த தவறுதான். எனினும் இந்த நாணயம் சட்டப்பூர்வமாக செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக