ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாய் நகரில் தொழிலாளியாக வேலை செய்பவர் ஒரு இந்தியர். இவர் ஒரு கட்டிடத்தில் லிப்டில் சென்றபோது, அதே லிப்டில் 9 வயது சிறுமி ஒருத்தியும் இருந்தாள். அந்த சிறுமிக்கு அவர் உதட்டில் முத்தம் கொடுத்தார். லிப்டு தரைத்தளத்துக்கு வந்ததும், அந்த சிறுமி கத்தத்தொடங்கினாள். இதை பார்த்த அந்த தொழிலாளி ஓட்டம் பிடித்தார். ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் கோர்ட்டில், தான் உதட்டில் முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். "திருமணமாகி 18 ஆண்டுகளாகி விட்டன. இன்னும் தனக்கு குழந்தை பிறக்கவில்லை. அதனால்தான் ஒரு குழந்தையாக நினைத்து சிறுமிக்கு முத்தம் கொடுத்தேன்'' என்று கோர்ட்டில் அவர் கூறினார்.
வழக்கு விசாரணை முடிந்து விட்டது. அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக