திங்கள், 3 ஜனவரி, 2011

த.தே.கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை (2)

(11.12.2010 வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)


அழைப்பு

இது சம்பந்தன் இலங்கைக்கு திரும்பியதால் சாத்தியமானது. ஜனாதிபதி ராஜபக்ஷ த.தே.கூ. தலைவருக்கு பேச்சுவார்த்தைக்கான ஒரு அழைப்பை அறிவுபூர்வமாக விடுத்தார். இந்த அழைப்பின் பின் சிறப்பம்சமாக, சம்பந்தனுடன் மட்டும் பேசவிரும்பியமை அமைந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியாக அழைக்கப்படவில்லை. சம்பந்தன் மட்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் 'ஒருவருடன் ஒருவர்' என்ற வகையில் பேச அழைக்கப்பட்டார்.

இவ்வாறு சம்பந்தனுக்கு மட்டும் அழைப்பு விடுவிக்கப்பட்டதற்கான ஒரு காரணம், ஜனாதிபதி இந்த அனுபவம் மிக்க தமிழ் தலைவருடன் கொண்டிருந்த சகஜ உறவாகும். இது நம்பிக்கை, சம்பந்தப்பட்ட விடயமாகவும் காணப்பட்டது. சில த.தே.கூ. பிரமுகர்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், கூற்றுக்களையிட்டு அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி கவலை கொண்டிருந்தமை கசப்பான யதார்த்தமாக இருந்தது. தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. அல்லது எல்.ரீ.ரீ.ஈ. சார்பு சக்திகளுடன் சில த.தே.கூ. விசுவாசிகள் கொண்டிருந்த கள்ள உறவுகள் பற்றி புலனாய்வு அறிக்கைகளும் கிடைக்கப்பட்டிருந்தன.

இதனால் ஜனாதிபதி, சம்பந்தனுடன் நேரடியாக பேசவிரும்பினர். அரசாங்கத்தின் எண்ணப்படி அப்பழுக்கில்லாத நற்சான்றை கொண்ட, ஒப்பீட்டளவில் இளையவர்களான த.தே.கூ. பிரமுகர்கள் சிலர் உள்ளனர். சிரேஷ்ட த.தே.கூ. தலைவர்களில், சம்பந்தனை மட்டுமே நம்பிக்கைக்குரிய, புலம்பெயர்ந்த புலிகளின் இரகசிய செல்வாக்கு அற்றவராக அரசாங்கம் கருதுகிறது.

ராஜபக்ஷவுக்கும் சம்பந்தருக்கும் இடையிலான 'ஒருவருடன் ஒருவர்' என்ற வகை பேச்சுகள் நவம்பர் 3, 2010 இல் இடம்பெற்றது. இரு பகுதியினரும் உதவியாளர் இன்றி ஊடாடினர். பொதுவாக இலங்கைக்கும் சிறப்பாக தமிழ் மக்களுக்கும் பொருத்தப்பாடுடைய பல விடயங்கள் விரிவாக பேசப்பட்டன. பேச்சின் இறுதிகட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதியுடனான பேச்சின்போது, சம்பந்தன் கிடைக்கப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்தும்படி ஜனாதிபதியிடம் வேண்டினார். அவர் ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் என்பதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதென்பதையும் சுட்டிக் காட்டினார். மஹிந்த சிங்கள மக்களின் முற்றுமுழுதான நம்பிக்கையை பெற்றுள்ளதால், சிங்கள கடும்போக்காளரின் எதிர்ப்பின்றி தமிழர்களின் நியாயமாக அபிலாஷைகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள முடியுமென சம்பந்தன் கூறினார்.

த.தே.கூ. அவரை நம்புவதுபோல மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சியை நம்பவேண்டுமென சம்பந்தன் ஜனாதிபதியை கேட்டுகொண்டார். இவ்வாறான பரஸ்பர விசுவாசம் கொண்ட கவிநிலை உருவாக்கப்படின், த.தே.கூ. ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்துக்கும் பூரணமாக ஒத்துழைப்பை வழங்குமென அவர் கூறினார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்துக்கு த.தே.கூட்டமைப்பின் தொகைரீதியான ஆதரவு தேவை இல்லாதுவிடினும், த.தே.கூட்டமைப்பின் பண்புசார் ஆதரவு, ஒத்துழைப்பு என்பவற்றால் அரசாங்கம் நன்மையடைய முடியுமென சம்பந்தனர் கூறினார்.

இலங்கை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அமைப்பு என்ற வகையில், டி.என்.ஏ.யின் ஒத்துழைப்பு, ஆதரவை பெறுவதனால் அரசாங்கம் அரசியல் ரீதியாக நன்மையடையும் என சுட்டிக்காட்டினார். த.தே.கூட்டமைப்பின் ஆதரவினால் ஜனாதிபதியின் அரசியல் தோற்றப்பொலிவு அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள், பன்மைத்துவம், ஜனாநாயகம் ஆகிய பிரச்சினைகளைக்கு முகங்கொடுக்கும் பலத்தையும் இது வழங்கக்கூடும்.

கூட்டுப்பொறிமுறை

த.தே.கூட்டமைப்பின் தலைவர், கொள்கையளவில் முன்னர் ஜனாதிபதி ஒப்புக்கொண்ட இரண்டு வேண்டுகோள்களையும் புதுப்பித்துக்கொண்டார். ஏப்ரில் நாடாளுமன்ற தேர்தலின் பின் ஜனாதிபதியிக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையிலான முதலாவது கூட்டத்தில், இரண்டு அரசாங்க – த.தே.கூ. கூட்டுப்பொறிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டிருந்தார். ஒன்று, வடக்கு, கிழக்கில், மீள்குடியேற்றம், அபிவிருத்தி விடயங்களை மேற்பார்வை செய்வதற்காகும். அடுத்தது நிலைபேறான அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காகும். கூட்டுக்குழுக்களில் ஒன்றுக்கு, நியமிக்கப்பட்டவர்களின் பெயரப்;பட்டியலையும் த.தே.கூ. சமர்ப்பித்திருந்தது.

சம்பந்தன் ஜனாதிபதியுடனான இந்த கூட்டத்தில் இந்த வேண்டுகோள்களை புதுப்பித்தார். யுத்தத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட வன்னியில், புனர்வாழ்வு, வாழ்வாதாரம் பற்றி த.தே.கூ. மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அவர் கூறினார். பொதுவாக வடக்கும் கிழக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாதாக கூறிய சம்பந்தன் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றி, புனர்வாழ்வு வழங்கி, வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும் என்றார். வேறுவிதமாக பாதிக்கபட்டவர்களுக்கும் பல வகையான உதவிகள் தேவைப்படுகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

சம்பந்தன், இந்த தொடர் செயன்முறையில் த.தே.கூ. சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றார். நாம் இதில் சம்பந்தப்படும்போது தமிழ் புலம்பெயர்ந்தோர் கணிசமான சர்வதேச சமுதாயம் என்பன, வடக்கு கிழக்கில் அவசரமாக மேற்கொள்ள வேண்டியவற்றை செய்து முடிக்க நன்முகத்துடன் உதவ முன்வரும் என சம்பந்தன் கூறினார். இதனால் இந்த செயன்முறைக்கு நற்பெயர் சேர்ந்து உத்வேகம் பிறக்கும் என அவர் கூறினார். அப்போது உதவியும் ஆதரவும் இலகுவாகக்கிடைக்கும் என்றார் சம்பந்தன்.

வடக்கு, கிழக்கில், மீள்குடியேற்றம் அபிவிருத்தி என்பவற்றை கையாளவும் மேற்பார்வை செய்யவும் அமையவுள்ள கூட்டுக் குழுபொறிமுறையில் சேர்ப்பதற்கு டி.என்.ஏ ஆல் நியமிக்கப்பட்ட ஆட்களின் பட்டியலை சம்பந்தர் மீண்டும் ஜனாதிபதியிடம் வழங்கினார். இரண்டு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும், த.தே.கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அடக்கி சேர்த்து பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது.

பெயர்கள்:

ஆர்.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் திருமலை மாவட்டம்

மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் யாழ் மாவட்டம்

சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் யாழ் மாவட்டம்

செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்

பொன் செல்வராசா நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம்

எஸ்.ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி மாவட்டம்

எம்.ஏ.சுமந்திரன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்

கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருடையது என்பது முக்கியமானது. சட்டத்துறை நட்சத்திரமான கே.கனகஈஸ்வரன் முன்னாள் தமிழ் காங்கிரஸ் செனட்டரும், வழக்குரைஞருமான எஸ்.ஆர். கனகநாயத்தின் மகன் ஆவார். சுயாதீனமான அரசியல் பார்வை கொண்ட புகழ்பெற்ற இந்த ஜனாதிபதி வழக்குரைஞர், அரசியலமைப்பு விவகாரத்தில் நிபுணத்துவம் உடையவர் என்ற காரணத்தால் சேர்க்கப்பட்டுள்ளார்.

குழப்பங்காலிகள்

விடயங்களை கெடுத்து அரசியல் பதற்றத்தை தணியவிடாது வைத்திருக்க விரும்பும் குழப்பக்கார்கள் இரண்டு இனத்தவர்களிடையேயும் இருப்பதை த.தே.கூ. தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினார். ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டில் த.தே.கூ. உறுதியாக இருந்து அழுத்தங்களை எதிர்த்ததாகவும் சம்பந்தன் கூறினார். த.தே.கூட்டமைப்பின் வேண்டுகோள்களை கருத்திலெடுத்து விரைவாகவும் நன்முகத்துடனும் செயற்படும்படி அவர் ஜனாதிபதியிடம் விநாயகமாக கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் முன்வைத்த கருத்துக்களை மிக அவதானமாக செவிமடுத்த மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்கட்சித் தலைவரின் கருத்துக்களை தான் மதிப்பதாக உறுதிப்படக் கூறினார். எதிர்பார்க்கக் கூடிய குழப்பக்காரர்கள் பற்றி தனக்கு பூரணமாக தெரியுமென ஜனாதிபதி சில வார்த்தைகள் மூலம் புலப்படுத்தினார். தேவை வரும்போது இந்த பிரச்சினைக்குரியவர்களை தன்னால் பார்த்துக்கொள்ள முடியுமென அவர் கூறினார். நாடு முகங்கொடுக்கும் பிரச்சினைகளை கையாள்வதில் அரசாங்கத்துடன த.தே.கூ. நன்முகமாக ஒத்துழைப்பது முக்கியம் என அவர் கூறினார்.

தனது அமைச்சரவை நண்பர்கள், அரசியல் ஆலோசகர்கள் ஆகியோருடன் பேசிவிட்டு, இரண்டு கூட்டுக்குழு பொறிமுறைகளை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார். பஸில் ராஜபக்ஷவிடம் பேசிவிட்டு மீள்குடியேற்றம் அபிவிருத்தி தொடர்பில் கூட்டு பொறிமுறைக்கு தான் அரசாங்க ஆட்களை நியமிப்பதாக கூறினார். அரசியல் தீர்வுகளை அடுத்த குழுவுக்கு, ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அலகப்பெரும, பஸில் ராஜபக்ஷ ஆகியோருடன் சில ட்ட நிபுணர்களையும் நியமிக்கப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார்.

நவமப்ர் 17 இல் ஜனாதிபதியாக பதிவயேற்ற பின் தான் இரண்டு கூட்டுக்குழு பொறிமுறைகளையும் நியமிப்பதாக கூறினார். சம்பந்தனை ஜி.எல்.பீரிஸ், பஸில் ராஜபக்ஷ ஆகியோருடன் தொடர்பிலிருக்குமாறு ஜனாதிபதி கூறினார். இத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தின் பின் சம்பதன் திருப்தியுடைய சந்தோஷத்துடனும் திரும்பினார். தம் இருவருக்குமிடையிலான பேச்சுகளின் விளைவுகள்பற்றி தனது கட்சி கூட்டாளிகளிடம் கூறிய அவர் எதிர்காலம் பற்றி நம்பிக்கையோடு இருந்தார். நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதியுடனான பேச்சின் சாரத்தை வலியுறுத்தி நவம்பர் 10 இல் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். கூட்டு பொறிமுறையின் அமைவை தான் எதிர்பார்த்திருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பாராட்டுகள்

ஜனாதிபதி, இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாக பதவியேற்றத்தை பாராட்டி நவம்பர் 18 இல் சம்பந்தன் ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பினார். 'வடக்கு கிழக்கின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில், குறிப்பாக ஐக்கிய இலங்கைக்குள், ஏற்புடைய அரசியல் தீர்வை படிமலரச் செய்வதில் நாம் உங்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆவலாவுள்ளோம்.'

'எமக்கு நீங்கள் உறுதி வழங்கியவாறு, இந்த பொறுப்பை செய்துமுடிக்க தேவையான பொறிமுறைகள் ஏற்பாடு செய்யப்படுமென நம்பிக்கையோடு உள்ளோம்'

இவ்வாறான நல்லெண்ணங்கள், நம்பிக்கைகள் என்பன வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும் வாக்குறுதியளிக்கப்பட்டதுபோல நவம்பர் 19 இன் பின் இரண்டு கூட்டு பொறிமுறைகள் அமைக்கப்படும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் விஜயத்தின் பின் இவை அமைக்கப்படும் அறிகுறிகள் உள்ளன.

இந்திய அமைச்சரின் விஜயமும் த.தே.கூட்டமைப்புக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்தது. பிரதான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கட்டங்கட்டமான பேச்சுப் பொறி முறை பற்றி கிருஷ்ணா கூறியிருந்தார். கிருஷ்ணாவை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி வழங்கிய பெருவிருந்தின்போது, இந்திய வெளிநாட்டமைச்சர் சம்பந்தனுடன் தனியாக பேசினார்.

த.தே.கூட்டமைப்புடன் கட்டங்கட்டமாக அரசியல் பேச்சுக்களை நடத்துவது முக்கியம் என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் விளக்கியதாக கிருஷ்ணா சம்பந்தரிடம் கூறினார். இந்த விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்தை ஜனாதிபதிக்கு கூறியதாகவும் கிருஷ்ணா தெரிவித்தார். தான் அடுத்த முறை ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்திக்கும்போது அரசாங்கத்துக்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் என தான் நம்புவதாக இந்திய பிரதமர் கூறியதாக தெரிகிறது.

ஹிந்து

எஸ்.எம். கிருஷ்ணா தோற்றுவித்த நன்நம்பிக்கைகள் இருந்த போதிலும் களநிலைவரம் சிறப்பாக இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியில் முடிந்த தன் ஒக்ஸ்போர்ட் உரைக்காக நவம்பர் 29 இல் லண்டனுக்கு போனார். த.தே.கூ. தலைவர் சம்பந்தன. சுகவீனமுற்று இந்தியாவுக்கு பயணமானார். ஜனாதிபதி டிசெம்பர் 3 இல் நாடு திரும்பினார். லண்டனில் தமிழ்புலம்பெயர்ந்தோரின் கூத்தடிப்பு காரணமாக நாட்டின் அகச்சூழல் மாறியிருந்தது சம்பந்தனின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், அவர் இப்போதும் இயலாமல் உள்ளார்.

த.தே.கூ. தலைவருக்கு ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட உறுதிப்பாட்டை அமுலாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், தமிழ் வட்டாரங்களில் கவலையை தோற்றுவித்துள்ளது. இந்த கவலை ஹிந்து பத்திரிகையுடனான நேர்முகத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களினால் மேலும் அதிகரித்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம். ஜனாதிபதியிடம் இவ்வாறு கேட்கிறார்.- ' இப்போது அரசியல் தீர்வுப்பற்றிய உயர் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 13 ஆவது பிளஸ் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இப்போது அது அடிபட்டுப்போவதாக தெரிகிறதே...?

ஜனாதிபதி ராஜபக்ஷ: உங்களுக்கு விளங்கும்தானே, இப்போது இதை மட்டும்தான் ஆராயலாம்- சகல கட்சிகளோடும் கூட. தேர்தலின்பின் நாம் பேச்சுகளை நடத்தியுள்ளோம். அவை தொடரும். நான் மனதில் கொண்டுள்ள தீர்வு அவர்களுக்கு போதாததாக இருக்கலாம். அவர்கள் இதை ஏற்காமலும் விடலாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. மக்கள் அதை ஏற்க வேண்டும். அவர்கள் புதிய தலைமை உருவாகுவதை விரும்புகின்றனர். அவர்களை அவர்களது கிராமங்களுக்கு அனுப்பியபின், அவர்கள் இந்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளனர். அரசாங்கத்தில் உள்ள, எதிர்வரிசையில் உள்ள அரசியல் தவைலவர்களுடன் ஏற்கெனவே நான் பேசியுள்ளேன்'.

என். ராம்: குறிப்பான விவரங்களை வெளிப்படுத்தாவிடினும் ஒரு தெளிவான அரசியல் தீர்வு உங்கள் மனதில் உள்ளதா?

ஜனாதிபதி : ஆம் ஆனால் நான் முதலில் அவர்களது கருத்தை அறியவேண்டும். இரண்டு பக்கத்திலிருந்தும், ஒரு குழுவை இதைப் பற்றி பேச அமைக்கவுள்ளோம்.

ஜனாதிபதி ராஜபக்ஷவினால் ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம். அவர்களுக்கு கூறப்பட்ட கருத்து பற்றி இந்த பத்தி விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், சம்பந்தனுக்கு தனியே பேசும்போது கூறப்பட்ட விடயத்துக்கும் பகிரங்கமாக சென்னையை மையமாகக்கொண்ட ஹிந்து பத்திரிகைக்கு கூறிய கருத்துக்குமிடையில் முரண்பாடு உள்ளதை சுட்டிகாட்ட விரும்புகிறது.

இணக்கம்

த.தே.கூ. , அரசாசங்கத்துடனான கட்டங்கட்டமான பேச்சுவார்த்தைக்காக தனது விருப்பத்தை வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நல்லெண்ண சமிக்ஞை மூலம் வெளிப்படுத்தியது. எதிர்பார்க்கப்பட்டது போல டி.என்.ஏ. எதிர்த்து வாக்களிக்கவில்லை. இந்த இணக்கமான நகர்வு நாடாளுமன்றத்தில் பஷில் ராஜபக்ஷவினால் மனதார வரவேற்கப்பட்டது.

ஊடக அறிக்கையொன்றில் த.தே.கூ. இவ்வாறு கூறியது. உடனடியாக மீளக்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பவை தொடர்பில், தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகிய எம்முடன் அரசாங்கம் பேசவேண்டும் என்பது, இந்த நாடாளுமன்றத்தின் ஆரம்பத்திலிருந்து எமது நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இதுவரை அரசாங்கம் இந்த வகையில எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த பின்னணியில் மீளக்குடியமர்த்தல், அரசியல் தீர்வு ஆகிய முக்கியமான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதில் எமது நல்லெண்ணத்தை காட்ட விரும்புகிறோம். எனவே 2011 வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இருக்க டி.என்.ஏ தீர்மானித்தது.

இலங்கையில் மோசமடைந்துவரும் இன உறவுகளின் வரலாறு, தலைவர்கள் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அல்லது மறுதலித்த சந்தர்ப்பங்களை நிறையவே கொண்டுள்ளது. ஜனாதிபதி காட்டுவதுபோல உள்ள தாமதம் அரசியல் இழுத்தடிப்பால் ஏற்பட்டதேயன்றி வாக்கு மீறலால் உண்டானதல்ல என நம்புவதே நல்லது. இப்போது ஜனாதிபதி காட்டிவரும் தாமதத்துக்கு காரணங்கள், விளக்கங்கள் கூற இந்த பத்தி விரும்பவில்லை. ஆனால் இயன்றளவு விரைவில், இரண்டு கூட்டு பொறிமுறைகளை அமைக்கும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றது.

சம்பந்தனின் சுகவீனம் நிச்சயமான ஒரு தடையாகவிருந்தபோதும், அது கூட்டு குழுக்களை முறைமையாக நியமிப்பதற்கு ஒரு தடையாகலாகாது. சம்பந்தன் வருகையின்றியே , த.தே.கூ. வட்டாரங்களுடன் ஆரம்பக்கட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்யலாம். அவரது உடல்நிலை தேறும்வரை நடப்பதை தெரியப்படுத்திக் கொண்டிருக்க முடியும்.

பேச்சுகளுக்கான ஒரு கூட்டு குழு பொறிமுறையை உருவாக்குதன்மூலம் டி.என்.ஏ. உடனான பேச்சுகளை ஊக்குவிப்பதில்தான் தொடக்கிவைத்த அரசியல் நகர்வை அதன் தருக்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டுமென இந்த பத்தி ஜனாதிபதியிடம் கேட்டு கொள்கின்றது.

இலங்கை தமிழருக்கு, காலம் முக்கியமானது.

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

டெய்லி மிரர்


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல