நாணயம் தொடர்பில், இலங்கையில், சதம் என்பது ரூபாயின் நூற்றில் ஒரு பங்கைக் குறிக்கும். இலங்கையில் நாணயங்களுக்கான தசம முறை பிரித்தானியரால் அறிமுகப் படுத்தப்பட்டது.
பின்னணி
1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள், இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் (sub-divisions) இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. இத்தோடு ஒரு துணை முறைமையாக தசம முறையில் அமைந்த செப்புக் காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன.
1872 ஆண்டு இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
* இந்திய ரூபாய் இது 100 சதங்களுக்குச் சமமாகக் கணிக்கப்பட்டது.
* 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட இலங்கைத் துணைநிலை (subsidiary) வெள்ளிக் குற்றிகள்.
* 5, 1, 1/2, 1/4 சதங்கள் பெறுமதி கொண்ட செப்பு நாணயக் குற்றிகள்.
கி.மு. 45: ஜூலியன் கலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1600: ஸ்கொட்லாந்தில் வருடம் ஆரம்பிக்கும் தினம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.
1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.
1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.
1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.
1808: அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது.
1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.
1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்திற்குப் பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.
1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது
1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.
1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.
1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.
1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.
2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.
2007: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுககொல்லப்பட்டார்.
2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.
2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.
2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக