வேலை வழங்குனர் மனைவியுடன் ஆடை வாங்கி வந்து அதனை தன்னை பணித்ததாகவும், அதனை தான் மறுத்து தான் தனது அறைக்குள் சென்றதும் தன்னை பின் தொடர்ந்து வந்த வேலை வழங்குனர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன்பின்பு தனது சேவை நிறுத்துமாறு வேலைவாய்ப்பு பெற்றுதந்த முகவர் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் குறித்த இலங்கை நாட்டுப் பணிப்பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனக்கு நேர்த்த நிலையினை பாதுகாப்பின் நிமித்தம் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு தெரிவிக்காது, குவைத் நாட்டில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்
சந்தேக நபரான வேலை வழங்குனரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கை முழுமையான சான்றுகளை அற்றது என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேக நபரது மனைவி குறித்த இலங்கை நாட்டுப் பணிப்பெண் தமக்கு தொடர்பாடல் பிரச்சினை உள்ளதாகவும் அதனால் அவரை மீண்டும் முகவர் நிலையத்திற்கே அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக