அவரை கொலை செய்வதற்கான சதி திட்டம் ராணுவ பிரிகேடியர் ஒருவர் வீட்டில் தீட்டப்பட்டது. என்றும் இந்த சதியில் 9 பேர் பங்கு கொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை இப்போது உள்துறை மந்திரி ரெகிமான் மாலிக்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
உள்துறை நடத்திய விசாரணை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. உள்துறை மந்திரியின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை நடந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த விசாரணை நடந்தது. இந்த சதியில் பங்கு கொண்ட 9 பேரில் 5 பேர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் வாடகைக் கொலையாளிகளை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். வாடகைக் கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடமும், ஆதரவும் கொடுத்தனர் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக