எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள காதலர் தினத்தையொட்டி அத்தினத்தை ஊக்குவிக்கும் வாழ்த்து அட்டைகளை அச்சிடுதல், பரிசு பொருட்களை விநியோகித்தல் என்பனவற்றுக்கு நேரடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அச்சு பணி உரிமையாளர்கள் ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
காதலர் தினத்தை குறிக்கும் சுவரொட்டிகள், பொதிகள், இருதயங்கள், பாதி இருதயங்கள், ரோஜா பூக்கள் உள்ளடங்கலான ஓவியங்களைக் கொண்ட வாழ்த்து அட்டைகளை தயாரிக்கவும் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றியம் கூறுகிறது.
ஈரானில் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக காதலர் தினம் பிரபலம் பெற்று விளங்குகிறது. பெப்ரவரி 14 ஆம் திகதி அந்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் சொக்கலேட்டுகள், மலர்கள், வாசனைத் திரவியம், கரடி பொம்மைகள் என்பனவற்றை பரிமாறிக் கொள்வது வழமையாகும்.
இந்நிலையில் மேற்படி மேற்குலக நாடுகளின் கலாசாரம் ஈரானில் பரவுவதை தடுக்க வேண்டுமென்று அந்நாட்டு பழைமைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த காதலர் தினத்துக்கு பதிலீடாக பேர்ஸிய காதல் தேவதையின் தினத்தை கொண்டாட சில தேசியவாத ஈரானியர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக