16 அடி நீளம் 90 கிலோ கிராம் நிறையுடைய பெண் பாம்புக்கும் அதை விட சிறிய ஆண் பாம்புக்கும் தலைநகர் பெனொம் பென்ஹின் தெற்கேயுள்ள கிராமமொன்றைச் சேர்ந்தவர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
பௌத்த மதகுருமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பாம்புகளுக்கான திருமணத்தில் நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் பங்கேற்றனர்.
இரு மணி நேரமாக சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற திருமணத்தையடுத்து, பௌத்த மதகுருமாரும் கிராமவாசிகளும் பாம்பு தம்பதிக்கு மலர் தூவி வாழ்த்துத் தெரிவித்தனர்.
பாம்புகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைப்பதானது சுபீட்சத்தையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என கம்போடிய இனத்தவர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
““எமது கிராமங்களிலிருந்து தீயவற்றை அகற்றி அதிஷ்டத்தை நிலை நிறுத்தும் வகையிலேயே இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம்'' என சம்றியன் என்ற மேற்படி பெண் பாம்பின் உரிமையாளரான நெத் வை (41 வயது) தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டு இந்த பெண் மலைப் பாம்பை முதன் முதலாக பிடித்து வீட்டுக்கு எடுத்து வந்ததாக தெரிவித்த நெத் வை அதன்பின் அப்பாம்பு தனது குடும்பத்தின் ஓர் அங்கமாக வாழ ஆரம்பித்ததாக கூறினார். அந்தப் பாம்பு தமது குடும்பத்தினருடன் வாழ வந்ததிலிருந்து தமக்கு துரதிஷ்ட சம்பவம் எதுவுமே நடக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆண் பாம்பான குரோங் பிச் 12 நாட்களுக்கு முன் கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக