ஸியாங்காய் எனும் இடத்திலுள்ள பனியால் நிறைந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடிய வேளை, ஸியயோலின் நியு என்ற மேற்படி சிறுவன் பனியில் வழுக்கிச் சென்று உடைந்த மின் சூடாக்கி உபகரண மொன்றின் மீது விழுந்துள்ளான்.
இதன்போது அந்த உபகரணத்தின் உடைந்த கூய கொழுக்கிப் பாகம் சிறுவனின் நெற்றியை ஊடுருவிச் சென்றுள்ளது.
இதனையடுத்து சிறுவன் சங்சுன் நகரிலுள்ள மருத்துவமனையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
கூரிய கொழுக்கி சிறுவனது மூளைப் பகுதியை ஊடுருவி இருப்பின் அவன் நிச்சயமாக உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என சிறுவனுக்கு சத்திர சிகிச்சையை மேற் கொண்ட மருத்துவரான யான் ஷிஜுன் தெரிவித்தார்.
சிறியதோர் நகர்விலும் மூளையை காயப் படுத்தி விடக்கூடிய நிலையிலிருந்த அந்த கொழுக்கியை மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வெளியேற்றியதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக