இதுகுறித்து கே.ஐ.எஸ்.டி.யின் மூத்த விஞ்ஞானி சாகாங் சியாங்& கூறுகையில், சோதனை முயற்சிக்காக 21 தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த ரோபோ வழங்கபட்டுள்ளது. சிறந்த திறமை, அனுபவம் நிறைந்த பிலிப்பைன்சில் உள்ள ஆங்கில ஆசிரியர்களால் ரிமோட் மூலம் ரோபோ இயக்கப்படும். வகுப்பறையில் பாடப் புத்தகத்தை வாசித்தல், பாட்டு படித்தல் போன்றவற்றை ரிமோட் மூலமே ஆசிரியர் மேற்கொள்ளலாம். மாணவர்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு ரோபோ உடனடியாக பதில் சொல்லும் என்றார்.
கல்வித்துறை அதிகாரி கிம் மியாங் கூறுகையில், ரோபோ வகுப்பறையில் அங்கும் இங்குமாக சென்று பாடம் எடுப்பதை மாணவர்கள் ஆர்வமுடன், ரசித்து கவனிக்கின்றனர். ஒரு இயந்திரத்துடன் பேசுவதை மறந்து, மனிதனிடம் பேசுவதை போலவே அவர்கள் உணர்கிறார்கள். அதனால், பாடத்தில் அதிக கவனம் காட்டுகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக