இதுவரை இல்லாத புதுமை இது. புற்றுநோய் மற்றும் வேறு நோய்களுக்கு பெறும் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடையும் பெண்கள் சில ஆண்டுகள் கழித்து விரும்பும்போது குழந்தை பெறுவதை இது சாத்தியமாக்குகிறது. பெண்ணின் கருப்பையில் இருந்து திசு எடுக்கப்பட்டு கை அல்லது அடிவயிற்றுப் பகுதியில் செலுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த திசுவில் இருந்து கருமுட்டை உருவாவதற்கு தேவையான மருந்துகள் அளிக்கப்படும்.
புற்றுநோய் சிகிச்சை முடிந்து நலமடைந்ததும், எப்போது விரும்பினாலும் அந்தப் பெண் குழந்தை பெறலாம். கையில் உள்ள திசுவில் இருந்து கருமுட்டையை பெற்று, கணவரின் விந்தணுவுடன் சேர்த்து கருவுறுவாக்கி, பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும். இதுபோன்ற சிகிச்சை இந்தியாவிலேயே முதல்முறை. ஜனவரியில் பெண்களிடம் இது சோதனை செய்யப்பட உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக