கடந்த ஆகஸ்ட் மாதம் 492 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் சன் சீ கப்பல் கனடாவை சென்றடைந்தது.
இந்த கப்பலை செலுத்திய மாலுமிகள் நால்வர் புலிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வற்கு உரிய விசாரணகைள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இவர்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படலாமென கனடா அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக