ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தீயின்றியும் ஒளியை ஏற்படுத்த முடியும்

கோயில் குட முழுக்கு, திருமணம், நீத்தார் இறுதிச் சடங்கு என நீளும் எல்லாச் சடங்குகளிலும் தீ வளர்த்து, வேதம் ஓதி சடங்கு செய்வதை ஒரு அடிப்படையான செயல்முறையாகக் கொண்டுள்ளனர் ஆரியர். அவர்களுக்கு அக்னி எனப்படும் தீ, ஒரு முதன் மையான தெய்வமாக இருந்துள்ளது. இதை ஆய்வு செய்வது தான் இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கம்.

பெரும்பான்மை ஆரியர்கள் என்பவர்கள் வெள்ளை வெளேர் என்ற வெண் தோற்றத்தை உடை யவர்கள். ஆனால் வெண் தோல் என்பது வெள்ள தேசத்துக்குரிய நிறமல்ல. இது பற்றிய விஞ்ஞான ரீதியான காரணத்தை முதலில் காண்போம். தீக்கும் வெண் தோலுக்குமான தொடர்பை இக் கட்டுரையின் பிற்பகுதி தெளிவுபடுத்தும்.

உலகின் மக்கள் பல்வேறு நிறங்களில் வாழ்கின்றனர். குளிர் பிரதேசங்களில் நீண்ட நெடிய காலம் வாழ்ந்து வருபவர்கள் வெண்ணிறமாகவும், வெப்பப் பகுதியில் வாழ்பவர்கள் கறுத்த நிறமாகவும், மற்ற இடங்களில் வாழ்பவர்கள் இடத்திற்கேற்ப இந்த இரண்டு வண்ணங்களுக்கிடைப்பட்ட நிறமுடையவர்களாகவும் உள்ளனர்.

குளிர் பிரதேசத்தில் வாழ்பவரின் நிறம் வெண்மையாக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

மனித உடல் சீராக இயங்க அதன் வெப்ப நிலை 98.6பி (37oவி) ஆக இருக்க வேண்டியுள்ளது. இது இயற்கையின் நியதி. இந்த வெப்ப நிலையை உடல் தனது உணவில் உள்ள எரிபொருளிலிருந்து தான் பெறுகிறது. ஆனால், குளிர் பிரதேசங்களில் வருடத்தின் பெரும்பான்மையான நாட்கள் சுற்றுச் சூழல் வெப்பம் பனியின் வெப்பநிலையைவிடக் குறைவானதே.

ஆக சுற்றுச் சூழலின் வெப்பம் உடலின் வெப்ப நிலையை விடக் குறைவாக இருப்பதால், மனித உடலிலிருந்து வெப்பம் தொடர்ந்து வெளியேறுகிறது. இந்த வெளியேற்றத்தின் அளவு இந்த வெப்பநிலை வித்தியாசத்தின் வர்க்கத்துக்கும் நேர் விகிதசமமானது என குளிர்தல் பற்றிய நியூட்டனின் விதி சொல்கிறது.

இந்த வெளியேற்றத்தை ஈடுபட்ட உடலுக்கு மிகுதியான உணவும் அதன் தொடர்ந்த செரிமானமும் தேவைப்படுகிறது. ஆக உடலின் வெப்ப வெளியேற் றத்தைக் குறைத்தால், உடலின் உணவுத் தேவையும் குறையும்.

இதற்கான தீர்வாக இயற்கை தேர்ந்தெடுத்த வழி தான் வெண் தோல். வெண்ணிறப் பொருட்கள் தனது வெப்பத்தை எளிதில் வெளியிடாது. வெப்ப வெளியேற்றம் வெண்ணிறப் பொருட்களுக்கு மிகவும் நிதானமாகவே நடைபெறும்.

ஆகையினால் தான் கடுங்குளிர்ப் பிரதேச மக்கள் வெண்ணிறத் தோலுடையவர்களாக உள்ளனர். வெப்ப நாட்டுக் கரடியின் மயிர் கறுப்பாகவும் பனிக்கரடியின் மயிர் வெண்மையாகவும் இருப்பதை யும் சேர்த்து ஒப்புநோக்க முடியும்.

வெப்ப நாடுகளில் திறந்தவெளி வெப்பம் பகல் நேரத்தில், மனித உடலின் வெப்பத்தைவிட மிகுதியாக வும், நிழலில் உடலின் வெப்பத்தை விடச் சற்று குறைவாகவும், பருவ காலங்களுக்குத் தகுந்த மாற்றங்களோடு நிலவும். எனவே, பகலில் திறந்த வெளியில் மனித உடலுக்குள் சுற்றுச் சூழல் வெப்பம் புகும். இது மனிதனுக்கு இன்னல் கொடுக்கக் கூடியது.

ஆதலால் நிழலுக்கு வந்தவுடன் உடல் விரைந்து குளிரடைய வேண்டிய தேவை உள்ளது. கறுத்த நிறமுடைய பொருட்கள் வெப்பத்தை எளிதில் வெளியேற்றும் குணமுடையவை. ஆதலினால் வெப்ப பிரதேசங்களில் மனிதர்களின் உடல் இயல்பாகவே கறுத்துள்ளது. நிறம் கறுப்பதற்கு சூரிய ஒளியோடு வரும் வெப்ப மற்றும் புறஊதாக் கதிர்களும் காரணம்.

நீக்ரோக்கள் மிகவும் கறுப்பாயி ருப்பது, அவர்கள் வெப்பம் மிகுந்த பூமத்திய ரேகை பகுதியில் வாழ் வதனால் தான். மேற்கத்தியவர்கள் வெண்மையாய் இருப்பது அவர்கள் வாழும் பகுதிகளில் சூரியனின் சாய் கதிர்கள் மட்டும் அதுவும் ஒவ்வொரு நாளின் சிறிய பகுதிகளில் மட்டும் விழுவதால், நிகழும் கடுங்குளிராலேயே என்பது விஞ்ஞான உண்மை.

இந்த இரண்டு உச்ச நிலைகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மஞ்சள், பழுப்பு மற்றும் இளங்கறுப்பு என்று வாழும் பகுதிகளுக்கேற்ற வண்ணம் கொண்டுள்ளனர்.

கடும் குளிர்ப் பிரதேசத்திலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் வந்தேறியவர்கள் ஆரியர்கள். கடுங்குளிர்ப் பிரதேசங்களில் உடலின் இயல்பான வெப்ப நிலையை விட சுற்றுச்சூழல் வெப்பம் குறை வாயிருப்பதனால் உடலின் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க, இயற்கை, மனித உடலின் நிறத்தை வெண்மை யாக்கிக் கொண்டது என்று பார்த்தோம்.

4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம். குளிர்ப் பிரதேசங்களில் வாழ்ந்த ஆரியர்கள் உழவுத் தொழில் செய்ததாக எந்த சான்றும் சிக்கவில்லை. மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட அக்காலத்தில் சிறு, சிறு இனக் குழுக்களாகவே அம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.

இயற்கையாக கிடைக்கும் உணவு வகைகளோடு, மாமிசம் உண்பதும் அவர்களது வழக்கம். மாமிச உணவில் மிகையான எரிசக்தி கிடைப்பதாலும், நிதானமாக செரிமானம் நிகழ்வதாலும் குளிர் பிரதேசத்திற்கு ஏற்ற உணவாக அது அவர்களுக்கு அமைந்தது.

தமிழர்களாகிய நாம் தொல் பழங்காலத்திலேயே, ஜம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்று ஐந்தையும் போற்றி வந்துள்ளோம். இதில் ஆரியர்களும் ஆகாயத்தை தவிர்த்து மற்ற நான்கு பூதங்களையும் வணங்கி வந்துள்ளனர்.

அதிலும் ஆரியர்கள் அந்த நான்கு பூதங்களைவிட அக்னி எனப்படும் தீயையே முதன்மையான தெய்வமாக வணங்கி வந்தனர். அதனுடைய நீட்சிதான் இன்றைய யாககுண்டம் வளர்க்கும் சடங்குகள். அவர்கள் தீக்கு முதன்மை தரவேண்டிய தேவை என்ன? தமிழர்களாகிய நாம் தீக்கு சிறப்பான முதன்மையை ஏன் தரவில்லை?

இங்கு தான் வாழும் இடம் சார்ந்த பண்பாடு, வழக்கம், குணம் போன்றவற்றை நாம் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. பனிப் பிரதேசங்களில் வருடத்தில் பெரும்பான்மையான நாட்களில் கடுங்குளிரே நிலவும். அக்கடுங்குளிரை எதிர்கொள்ள குகை அல்லது குடிசைகளின் நடுவில் தீயை எரிய விடுவார்கள். அந்தத் தீயே இரவில் ஒளியையும் கொடுக்கும். தீயை மூட்டுவது எளிதல்ல என்பதால், அணையாத தீயாகவே அத்தீயைக் காப்பார்கள்.

தீயில் சுட்ட மாமிசம் சுவையா யிருந்ததைக் கண்ட ஆரியர்கள், அந்த தீயிலேயே தாங்கள் வேட்டையாடிய விலங்குகளைப் பொசுக்கி உண்டு மகிழ்ந்தனர். நாளின் பெரும்பான் மையான நேரங்கள் தீயைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது.

அவர்களின் கல்வி, கேளிக்கைகள் எல்லாம் தீயைச் சுற்றியமர்ந்த படியே தான் நடந்தது. பெரியவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை, இளைய தலைமுறையினருக்கு சிறிய பாடல்கள் வாயிலாக மனனம் செய்துகொள்ள ஏதுவான முறையில் சொல்லிக் கொடுத்தனர்.

அப்போது அவர்களிடம் எழுத்துருக்கள் உருவாகாமல் இருந்ததனால் ‘சுலோக’ வடிவிலேயே பாட்டுக்களாக அந்த கல்வி இருந்தது. அப்போது அவர்கள் அறிந்த இசை என்பது இரண்டு சுரங்கள் கொண்டது தான். எனவே தான் இன்றைய சமஸ்கிருத சுலோகங்கள் கூட இரண்டு கரங்களைப் பயன்படுத்தி இன்றும் பாடப்படுகின்றன. அவர்கள் பேசிய மொழி அஸ்வெதா என்று அழைக்கப்பட்டதாக தெரிகின்றது.

ஆக, குளிர்காய மூட்டிய தீ, உணவைப் பொசுக்கவும், கல்வி போதிக்கவும் பயன்பட்டது. தீயின் முன்னே இவையனைத்தையும் இவர்கள் செய்ததனால் இது அவர்களின் அடிப்படை பண்பாடாக பரிணமித்தது. அத்தகைய பண் பாட்டோடு இந்திய நிலப்பரப்பில் நுழைந்த ஆரியர்கள் இங்கும் அதே வழக்கங்களைக் கைக்கொண்டனர். இந்திய நிலப்பிரப்பில் குளிர் காய வேண்டிய நாட்கள் குறைவானதாக இருந்தாலும், அவர்களின் பண்பாடாக இந்த வழி முறைகள் தொடர்ந்தன.

அவர்கள் தற்போது யாக குண்டத்தில் உயிர்களைப் பொசுக்குவதில்லையே என்று கேட்கலாம். ஆனால் புத்தன் காலம் வரை அதை அவர்கள் செய்துகொண்டுதான் இருந்தனர். யாககுண்டம் மூட்டி, உயிரோடு விலங்குகளை அதில் எரித்து சடங்கு முடிந்ததும் அவற்றில் சுட்ட ஊணைப் புசித்தனர். புத்தர் இது பற்றிக் கேள்வி எழுப்பியபோது ஆரியர்கள், இந்த விலங்குகள் சொர்க்கம் போகும் என்று விளக்கினர்.

அப்படியானால் ஆரியர்களாகிய உங்களையும் தீயில் போடால், சொர்க்கம் போகலாமல்லவா என்று கேட்ட புத்தரைப் பார்த்து அலரிப்போன அவர்கள், அப்போதிலி ருந்து யாககுண்டத்தில் உயிர்ப்பலி கொடுத்து ஊண் உண்ணும் வழக்கத்தை விட்டனர். காலப் போக்கில் ஊண் உண்ணுவதையே கூட விட்டொ ழித்தனர். ஆனால் மற்றபடி தீமூட்டி சடங்கு செய்யும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

இங்கே ஒரு ரசனையுள்ள ஓர் செய்தியை கவனிக்க வேண்டும். ஆரிய இனம் அனைத்தும் இந்தியா வுக்குள் வந்துவிடவில்லை. ஆரிய இனக் குழுக்களுள் பல உலகெலாம் பரவி, இன்றும் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் யாக குண்ட வழக்கம் அவர்களுள் யாருக்கும் இன்று இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களது அக்கால யாககுண்ட பண்பாடு இயற்கையான மாற்றங்களை அடைந்து, தற்போது வீட்டின் நெருப்பெரியும் பகுதி (பிirலீ ஜிlaணீலீ) என்று நாகரிகமான நவீன பயன்பாடாகி மலர்ந்துள்ளது. இதுவும் குளிர் நாடுகளில் மட்டும்தான்.

அதேபோல, யாககுண்டம் தேவைப்படாத இந்திய நிலப்பரப்பில் அந்தப் பண்பாடே அழிந்திருக்க வேண்டுமே? 4000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரியப் பண்பாடு, இந்திய நிலப்பரப்பில் இன்றும் தொடர வேண்டிய காரணம் என்ன?

ஒரு பண்பாடு என்பது சூழலியல் தேவையின் அடிப்படையிலேயே படிப்படியாக உருவாகி வளர்ந்து செழிப்படைகிறது. ஆனால் சூழல் மாற்றத்தால் அந்த பண்பாடும் மாற்றமடைவது தான் இயல்பானது. மேற்குலகில் அறிவியல் வளர்ச்சியினால் அவர்களின் பழைய அக்கினியை மையப்படுத்திய பண்பாடுகள், கால, சூழல், அறிவியல் மாற்றங்களால் இயற்கையான மாற்றமடைந்தது.

சமையலறை இருப்பதால் (பிirலீ ஜிlaணீலீ) மாமிசம் சுடத்தேவை இல்லை. எழுத்து மொழி உருவான பிறகு சுலோக வழிக் கல்வி தேவையற்றதாகி விட்டது. சுலோகங்களை எழுத உருவாக்கப்பட்ட பேசப்படாத சமஸ்கிருதம் என்ற குழுஉக்குறி மொழி, தேவையற்றதானது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், தீயால் நன்மையும் உண்டு, கெடுதியும் உண்டு. ஆதிகாலத் தமிழர்களுக்கு தீயால் நன்மைகளைவிடக் கெடுதியே மிகையாக நிகழ்ந்தது. தற்காலத்தில் தீயின் நற்பயன்கள் மிகுதியாக வளர்ந்திருந்தாலும் அதன் அழிவுத் திசைகளும் வளர்ந்தேயுள்ளது. உண்மையாகப் பார்த்தால் தீயோடு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் தான், கெடுதிக்குப் பெயரே ‘தீய்மை’, ‘தீயது’ என்றாகியது. ஆதிகாலத் தமிழ்ச் சொல்வழக்கில்,

தீ என்பது தமிழர்களின் பல தெய்வங்களில் ஒன்றானது. தீயின் அழிவு சக்தியை உணர்ந்திருந்த ஆதித் தமிழன், சிவனையே கூட தீயின் (அழிவின்) ஒரு வடிவமாகவும் வணங்கினான் (சிவம் – சிவப்பு - நெருப்பு) இது தன்னை அச்சுறுத்தும் அனைத்தையும் வணங்கும் இயல்பான ஆதி மனிதர் பண்பாடுதான்.

புனிதமாகப் பார்க்க வேண்டிய ஜோதி எனப்படும் ஒளிதானே தவிர அக்கினி எனப்படும் தீ அல்ல. ஒளியால் தாவரங்கள் வளர்கின்றன. மற்ற அனைத்து உயிர்களுக்கு உணவளிககும் மூலமாக திகழ்கின்றன. ஆனால், தீயால் தாவரங்கள் எரிந்து பொசுங்கி அழிகின்றன. தீயிலிருந்து ஒளியும் பிறந்தாலும் தீ வேறு, ஒளி வேறு. தீயில்¨லாமல் ஒளியை ஏற்படுத்த இயலும்.

தீயில்லாமல் ஒளி ஏப்படுத்தும் எண்ணற்ற சாதனங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கையும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அதையும் நிகழ்த்தியுள்ளது. மின்மினிப் பூச்சி ஒளி இரசாயனத் தாக்கத்தால் ஒளி ஏற்படுத்துவது ஒரு விந்தை. இதைப்போன்று பல உள.

ஆக, ஒளி புனிதமானது. ஆறாம் திருமுறையில் பகுத்தறிவு ஆன்மீகம் பேசிய வள்ளலாரும், ஒளியை வழிபடச் சொன்னார். ஒளி தரும் சூரியனுக்கு தை முதல் நாளன்று தமிழர்கள் நன்றி செலுத்துவது பண்டைத் தமிழரின் மாண்புக்கு ஒரு அடையாளம்.

ஆக, தமிழர்கள் தங்களது சடங்குகளை அகல் விளக்கு அல்லது குத்துவிளக்கு போன்றவற்றின் முன்னிலையில் நிகழ்த்துவது கூட அறிவுக்குகந்த செயலன்றி வேறல்ல.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல