அல்வாய் கிழக்கு மணியம் பாடசாலை வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான திருமதி யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். நேற்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதன்போது தாயாரை ஆயுததாரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இழுபறிபட்ட பிள்ளைகளை துப்பாக்கியால் அச்சுறுத்தி விட்டு அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து நெல்லியடிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட பெண் ஆறு பிள்ளைகளின் தாயாராவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக