இந்த தகவலை போலீசாரிடம் சிக்கிய 12 வயது சிறுமி மீனா குல் தெரிவித்தாள். அவள் மனித வெடிகுண்டாக செயல்பட பயிற்சி பெற்றவள். அவள் ஆப்கானிஸ்தான் எல்லையில் முன்டா பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாள்.
சமீபத்தில் கர் என்ற இடத்தில் உணவு விநியோக மையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் தீவிரவாதி தான். அவர் தான் பாகிஸ்தானின் முதல் பெண் மனித வெடிகுண்டு ஆவார். இந்த தாக்குதலில் 46 பேர் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர்.
சொர்க்கத்தில் உங்களுக்கு இடத்தை கடவுள் பரிசாக அளிப்பார் என்று ஆசை காட்டிய தீவிரவாதிகள் பெண்களை தற்கொலை தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்த்து உள்ளனர். அவர்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. சிறு சிறு குழுக்களாக சென்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்த அனுப்பப்பட இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக