துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தபாலகத்தில் கடைமையாற்றும் தேவராசா கேதீஸ்வரன் என தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் அனைவரும் நித்தரைக்குச் சென்று கொண்டிருந்தவேளை தலைக்கவசம் அணிந்து கைத்துப்பாக்கி மற்றும் கொட்டனுடன் வந்த இருவர் வீட்டில் லப்டப் இருக்கிறதா? கைத்தொலை பேசி இருக்கிறதா? எனக் கேட்டதுடன் அனைவரையும் ஆயுத முனையில் நிறுத்தி வைத்துக் கொண்டு வீட்டையும் சோதனையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை உணர்ந்த இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் கேதீஸ்வரனைச் சரமாரியாக சுட்டு விட்டுத் துப்பாகிதாரிகள் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிந்திக்கிடைத்த தகவலின் படி (உறுதிபடுத்தமுடியாத தகவல்)
இவர் தனது பேஸ்புக்கில் யாழில் இலங்கை இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், தமிழீழ தேசிய பூவான கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். அதன் காரணமாகவே இவர் இராணுவம் அல்லது துணைக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் இவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக