இருபாலைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து இருபாலைச் சந்தியில் உள்ள இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நபர் மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சம்பவத்துடன் தொடர்புடைய பிரஸ்தாப இளைஞன் கோப்பாய் பகுதியிலுள்ள தனியார் கம்பனி ஒன்றில் தொழில் புரிவதற்காக இருபாலைக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் இருபாலை கிழக்கு வீதியில் தனிமையில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை இவர் பின் தொடர்ந்து சென்றதாகவும் இது தொடர்பில் அப்பெண் அப்பகுதி இளைஞர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும் இளைஞர்கள் அவரைத் துரத்திப் பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தினை விசாரித்த இராணுவத்தினர் சந்தேக நபரை நையப்புடைத்து கடுமையாக எச்சரித்ததுடன் அவரை உடனடியாக அவரின் சொந்த இடமான கல்முனைக்கு அனுப்பி வைத்தனர்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக