உலகில் செல்வத் திரவியத்தினதும், சீர்கேட்டினதும் பாரிய அடையாளச் சின்னங்களில் ஒரு இரவைக் கழிப்பதற்காக பிரான்ஸ் அரசு அங்கு வரும் உல்லாசப் பயணிகளிடம் 800 டொலர்களை அறவிடத் தீர்மானித்துள்ளது.
இதில் ஒன்று The Chate au de Versalles என்பதாகும். இது ஒரு காலத்தில் சூரியக் கடவுள் என அழைக்கப்பட்ட XIV லூயிஸ் மன்னனின் மாளிகையாகும்.
1680 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியது. மற்றது அந்த மன்னனின் மனைவியின் மாளிகையான மக்கள் மத்தியில் அவ்வளவு தூரம் பிரபலம் பெறாத Marie Antoinette ஆகும்.
இந்த மாளிகைகளோடு இணைந்த கட்டடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிறுவ தனியார் நிறுவனமொன்றுக்கு பிரான்ஸ் அரசு அனுமதியளித்துள்ளது. நாட்டில் வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டடங்களாக இருந்தும் கூட தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கட்டடங்களை மறுசீரமைத்து இலாபமீட்டும் முயற்சிகளில் பயன்படுத்த தனியாருக்கு அனுமதியளிக்க பிரான்ஸ் அரசு முடிவுசெய்துள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே மேற்கூறப் பட்ட இரண்டு இடங்களும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2011 இறுதியில் திறக்கப்படவுள்ள இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் 23 அறைகளைக் கொண்டி ருக்கும்.
மன்னன் லூயிஸின் மனைவி தனது அளவுக்கதிக ஆடம்பர செலவினங்கள் காரணமாக மக்களின் கடும் வெறுப்புக்கு ஆளான ஒருவர். மன்னன், மனைவி ஆகிய இருவருமே 1789 பிரான்ஸ் புரட்சியின் போது மக்களால் தலை கொய்யப்பட்டவர்கள்.
பிரான்ஸில் இது ஒரு முன்னோடி மூலதன முயற்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக