சிங்கப்பூருக்குச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் தனது கடவுச் சீட்டை இன்னொருவருக்கு விற்றுவிட்டு, பின்னர் தனது கடவுச் சீட்டு தொலைந்துவிட்டதாக முறைப்பாடு செய்தார். ஆர்.எஸ் மட்டுமேஜ் (38) என்ற இப்பெண்மணி 600 டொலர்களுக்கு தனது கடவுச் சீட்டை இன்னொரு இலங்கைப் பெண்ணுக்கு விற்றுள்ளார். பின்னர் கடந்த புதன்கிழமை அன்று, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரசபைக்குச் சென்ற அவர் தனது கடவுச் சீட்டு தொலைந்து விட்டதாக முறையிட்டார்.
ஆனால் அவரது கடவுச் சீட்டு தொலையவில்லை, விற்கப்பட்டுள்ளது என்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் இதை எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பதை நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லவில்லை. அதோடு தாம் தனது கடவுச் சீட்டை விற்றுவிட்டதை அப்பெண்மணியும் இன்று நீதிமன்றில் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இப்பெண்ணின் கடவுச் சீட்டில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி வரையான சமூக பயண வீசா செல்லுபடியாகும் நிலையில் இருந்ததால், அதற்கு நல்ல கிராக்கி இருந்துள்ளது. மேலும், இக்கடவுச் சீட்டை வாங்கிய பெண்மணி குறித்த விசாரணை வரும் திங்களன்று நடக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக