டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை கம்ப்யூட்டரில், போல்டர் ஒன்றுக்கு மாற்றி, பின்னர் அவற்றை சிடி ஒன்றில் எழுதிய பின்னர் போல்டரில் உள்ள படங்களை அழித்த பின்னர் போல்டரை அழிக்க முயற்சிக்கையில், போல்டரில் பைல்கள் உள்ளது எனவும், போல்டரை நீக்க முடியாது எனவும் செய்தி கிடைக்கிறது. உண்மையில் போல்டரில் எந்த போட்டோ பைலும் இல்லை. கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அழிக்க முயற்சித்தாலும் அழிய மறுக்கிறது. அதன் காரணம் என்ன?
இந்த பிரச்னை நம் கண்களுக்குத் தெரியாத பிரச்னை ஆகும். இதனைத் தீர்த்துவிடலாம். போட்டோக்கள் உள்ள போல்டரைத் திறக்கையில், விண்டோஸ் அவற்றை தம்ப் நெயில் என்ற முறையில் சிறிய அளவில் காட்டும். இவை சிஸ்டத்தினால், தானாக உருவாக்கப்படும். இந்த தம்ப் நெயில் காட்சிகள் கூட umbs.db என்ற பெயரில் உள்ள பைலில் வைக்கப்படும். இந்த பைல் சாதாரணமாகக் காட்டப்பட மாட்டாது. எனவே தான் போல்டரை நீக்க எண்ணி முயற்சிக்கையில், பைல் உள்ளது என்ற செய்தி வருகிறது. இந்த பைல் தானாக உருவாகும் சூழ்நிலை அமைப்பை மாற்றினால், இந்நிலையைத் தவிர்த்துவிடலாம்.
Tools கிளிக் செய்து Folder Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் View டேப் தேர்ந்தெடுக்கவும். இங்கு ‘Do not cache thumbnails’ என்ற வரி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் முன் உள்ள பாக்ஸில் சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக