சில புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்கையில், டி.எல்.எல். பைல் எனச் சிலவற்றைக் காட்டி, இதனை நீக்கவா? வேறு சில புரோகிராம்கள் இதனைப் பயன்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. இதனை நீக்கலாமா? எப்படி நீக்கப்படும் புரோகிராம்களுக்கு மட்டுமே இவை சார்ந்தவை என்று அறிவது?
டி.எல்.எல். பைல் (Dynamic Link Library) என்பது சில வகையான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான சப்போர்ட் தரும் பைல்களாகும். (இவை பெரும்பாலும் உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் காணப்படும்.) புரோகிராம் ஒன்று ஒரு சிறிய பொதுவான செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டியதிருக்கலாம். இதற்கென அந்த புரோகிராமில் கோடிங்வரிகளை எழுதி, அந்த புரோகிராமின் அளவை அதிகப்படுத்தாமல், இது போன்ற டி.எல்.எல். பைல்களை அந்த இடத்தில் அழைத்து இயங்க வைக்கும்படி புரோகிராம் அமைக்கலாம். பொதுவான செயல்முறைகளுக்கென இவை எழுதப்பட்டு அமைக்கப்படுவதால், பல சாப்ட்வேர்கள் இந்த டி.எல்.எல். பைல்களைப் பயன்படுத்தும். சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை அழிக்கையில், இதனை அழிக்கவா? இதனை மற்ற புரோகிராம்கள் பயன்படுத்தலாம் என செய்தி கிடைத்தால், அவற்றை அழிக்கக் கூடாது.
ஆனால், அந்த சாப்ட்வேர் புரோகிராம் மட்டுமே பயன்படுத்தும் டி.எல்.எல். பைல்களை வைத்திருப்பதில் பயன் இல்லையே. இவற்றை நாம் எப்படி அறிந்து கொள்வது? இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இருந்து நீக்க, அதன் மெனுவிலேயே அன் இன்ஸ்டால் என்று ஒரு பிரிவு கொடுத்திருப்பார்கள். அதனைக் கிளிக் செய்வதன் மூலம், நீக்கினால், சார்ந்த டி.எல்.எல். பைல்கள் தாமாக நீங்கிவிடும். அல்லது சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தியும் அன் இன்ஸ்டால் செய்திடுகையில் இவை நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக