புதன், 28 மார்ச், 2012

சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- 20minuten. பத்திரிகை தகவல்!

சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம் என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


நாட்டை காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை துண்டு பிரசுரம் மஞ்சள் கடித உறையில் வைத்து அனுப்ப பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் சுவிஸில் உள்ள சிறிலங்கா தூதரகமும், சுவிஸில் உள்ள ஈ.பி.டி.பி குழுவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேர்ண், வோ, சூரிச், உட்பட சுவிஸில் பல மாநிலங்களிலும் உள்ள தமிழர்களுக்கு எச்சரிக்கை கடிதமும், இறுவெட்டும் அனுப்பட்டுள்ளதாகவும், அந்த இறுவெட்டில் எச்சரிக்கை ஒலி அடங்கிய செய்தி ஒன்று சொல்லப்பட்டிருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்கள், ருவிட்டர், பேஸ்புக் ஊடாக செய்திகளை வெளியிடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அந்த இறுவெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்ரேலியா உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் இந்த எச்சரிக்கையை மீறி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அல்லது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக அவதூறாக பேசுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கைப்பட்டுள்ளதாக 20மினுட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சுவிஸில் எத்தனை பேருக்கு இந்த கடிதம் கிடைத்திருக்கிறது என்பதை சரியாக கூற முடியாவிட்டாலும் பேர்ன் நகரில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இக்கடிதம் கிடைத்திருப்பதாக தாம் உறுதி செய்திருப்பதாக 20மினுட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பேர்னில் இருக்கும் தமிழ் பெண் ஒருவர் 20மினுட்டனுக்கு தகவல் வழங்கிய போது தனது பெற்றோருக்கு இந்த எச்சரிக்கை கடிதம் கிடைத்திருப்பதாகவும், அதனால் தனக்கும் தனது பெற்றோருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுவதாகவும், வெளியில் நடமாட பயமாக இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் வாழும் அநேகமான தமிழ் குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள சுவிஸில் அகதி தஞ்சம் கோரியவர்கள். தங்களின் உறவினர்கள் இலங்கையில் இருப்பதால் அவர்களுக்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை படைகளாலும் ஆபத்து ஏற்படலாம் என தாம் அஞ்சுவதாக பல தமிழர்கள் அஞ்சுவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலங்களில் தாங்கள் கலந்து கொண்டதை தவிர சிறிலங்கா அரசுக்கு எதிராக வேறு எதையும் செய்யவில்லை என்றும் ஆனால் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் பேர்ன் நகரில் உள்ள தமிழ் பெண் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் எங்கும் கண்ணும் காதையும் வைத்திருக்கிறார்கள் என்றும் சுவிஸில் உள்ள தமிழ் மக்களின் நடமாட்டத்தை ஈ.பி.டி.பி போன்ற ஒட்டுக்குழுக்கள் மூலம் தகவல்களை பெற்று தங்களுக்கு மரண அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார்கள் என சுவிஸில் உள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஊர்வலங்களில் கலந்து கொண்ட தமிழ் மக்களின் புகைப்படங்களையும், வீடியோவையும் பெற்றுள்ள ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகமும், சிறிலங்கா புலனாய்வு பிரிவினரும் இந்த மரண அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். இந்த கடிதங்களை யார் அனுப்பினார்கள் என்பது சரியாக தெரியாவிட்டாலும், இதன் பின்னணியில் சிறிலங்கா தூதரமும், சில சிறிலங்கா படைகளுக்கு ஆதரவான சில குழுக்களும் இருக்கலாம் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இது ஒரு அபத்தமான செயல். சில கடிதங்கள் சரியான விலாசங்கள் இல்லாததால் ஒப்படைக்க முடியாது தபாலகங்களில் தேங்கிக்கிடப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை கடிதம் தொடர்பாக சுவிஸ் சமஷ்டி புலனாய்வு காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

இதேவேளை சுவிஸில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த ஈ.பி.டி.பியினர் தொடர்பாக சுவிஸ் காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சுவிஸில் உள்ள ஈ.பி.டி.பியினரே இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கையில் நாடு பூராகவும் இந்த துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த துண்டு பிரசுரமும், பிரத்தியேகமாக இறுவெட்டும் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதோ..

புலி ஆதரவாளர்களே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்


இலங்கை மண்ணில் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம் ஊடகப்போர் மக்கள் எழுச்சி என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்ட தமிழ் மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான நிலக்சன், குணேந்திரன் மக்கள் படை உறுப்பினர்கள் (ஜனா, அனுதீபன், ரஜீவன், நிதன்) மதகுருக்கள் நாடாளுமன்ன உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் (ரஜீவன்) ஆகியோருக்கு எம்மால் மரண தணடனைகள் வழங்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டில் விடுதலைப் விடுதலைப் புலிகளும் அவர்களின் முட்டாள்தனமான ஈழ விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு இன்று ஐக்கிய இலங்கைக்குள்இரண்டாம் இனமாக வாழ தமிழர்கள் முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும்பாடசாலைகளில் பயங்கரவாதத்தை தூண்டுவது மற்றும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.
இணையத்தளங்களில் இலங்கை அரசு சம்மந்தமாக பொய்ப்பிரசாரம் செய்வது முகப்புத்தகங்களில், டுவிட்டர், சமூக வலைத்தளங்களில் இலங்கை அரசுக்கு எதிராக எழுதுவது, இலங்கையின் கௌரவ அமைச்சர்கள் மீதும் அவதூறு ஏற்படும் வகையில் போராட்டம் மற்றும் வழக்குகளைப் போட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மீது அவதூறு எற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இறுதியாக எச்சரிக்கின்றோம்.

குறிப்பாக – தினகரன் திவாகரன், கிரிசாந், திவாகரன் மற்றும் குருபரன் (யாழ்ப்பாணம்) அருளினியன், கஜேந்திரகுமார், குமரன் தேனுகாந்தன் (இந்தியா) தனம், கண்ணன், றஞ்சன், அங்கஜன், சந்துரு (லண்டன்) சிவகுரு, ஆறுமுகம், நிசாந்தன் (கனடா), செல்வம், ரவி, சாச ராசன், தனு (பிரான்ஸ்) போன்றவர்களையும் இவர்களுடன் இணைந்து செயற்படும் புலி ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். உங்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்மபுகின்றோம்.

இனப்பிரச்சினை முடிவிற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் இரண்டாம் இனமாக தமிழர்கள் வாழ முற்பட்டு வருகின்றார்கள். மீண்டும் ஈழ விடுதலை என்ற பெயரில் பலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிவிற்கு வித்திடும் என்றும் எச்சரிக்கின்றோம்

நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு – நாம் இலங்கையர் பாதுகாப்பு படை.



20 minuten பத்திரிகை செய்தியை பார்வையிட இங்கே அழுத்தவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல